பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 245 தம்மால் இயன்ற வரையில் திறமையாகப் பேசி அவளைத் தப்புவிக்க முயன்றார். ஆயினும், அது சிறிதும் பலியாமல் போயிற்று. ரமாமணியம்மாளுக்கு இரண்டு வருஷக் கடினக்காவல் தண்டனையும், மற்ற ஆட்கள் பதின்மருக்கும் ஒவ்வொரு வருக்கும் அவ்வாறுமாத காலம் கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. அதன் பிறகு சட்டைநாத பிள்ளையை மறைத்து வைப்பதில் அவருக்கு உடந்தையாய் இருந்த குற்றத்தை அப்துல் வகாப் சாயப்பு என்பவரும், மும்தாஸ் பீபீ என்கிற ஸ்திரீயும் செய்ததாகக் கொணர்ந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்கு முன் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆட்களுக்கு ஜட்ஜ் துரை குறைவான தண்டனை கொடுத்ததை அவர்கள் கவனித்துக் கொண்டிருந்ததன்றி, சட்டைநாத பிள்ளையே தண்டனை அடைந்து விட்டமையால் தாம் தப்ப முடியாதென்பதையும் உணர்ந்து அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டனர். மும்தாஸ் பீபீ என்பவள் உண்மையில் பத்மாசனி என்ற தாசி என்றும், அப்துல் வகாப் என்பவன் அவளுடைய அண்ணனான கலியபெருமாள் பிள்ளை என்பவன் என்றும், நெடுநாளாய் சட்டைநாத பிள்ளை பத்மாசனியை வைத்திருந்தார் என்றும், அவர் சிறைச்சாலையில் இருந்த போது மாசிலாமணிப் பிள்ளை தங்களைக் கேட்டுக் கொண்டதன் மேல் தாங்கள் அவருக்கு உதவியாய் இருந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். ஜட்ஜ் துரை அவர்களுக்கும் அவ்வாறுமாதக் கடினக் காவல் தண்டனை விதித்தார். கடைசியாக மாசிலாமணியும், ரமாமணியம்மாளும், இடும்பன் சேர்வைகாரனது ஆட்கள் பதினாறு மனிதர்களும், கொணர்ந்து கைதிக் கூண்டில் நிறுத்தப்பட்டனர். அந்த ஆட்களுள், முன்னர் ரமாமணியம்மாளோடு, தண்டனைப் பெற்ற பத்து மனிதர்களும் மறுபடியும் வந்திருந்தனர். மாசிலாமணியின் மீது அடியில் காணப்படும் குற்றங்கள் சுமத்தப்பட்டன. (1) சட்டை நாத பிள்ளையைச் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கவும், அவரை மறைத்து வைக்கவும் பலரைத் தூண்டி, அந்தக் காரியங்களை நிறைவேற்றியது. (2) நாகப்பாம்புகளைப் பெட்டிக் குள் வைத்து திகம்பர சாமியாருக்கு அனுப்பி அவரைக் கொல்ல எத்தனித்தது. (3) பிறகு ஆட்களை அனுப்பி சென்னை பட்டாபி