பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 249 பிள்ளை, திரிபுரசுந்தரியம்மாள், கண்ணப்பா, சுந்தரம் பிள்ளை ஆகிய முக்கியஸ்தர்கள், கந்தசாமியும் பெண் வேஷத்தில் வந்திருப்பானோ என்று சந்தேகித்தவர்களாகவே இருந்தனர் ஆதலால், அந்தப் படத்தைப் பார்த்த பிறகே அவர்களது மனம் ஒருவாறு அதை உண்மை என்று நம்பியதன்றி, மகா உத்தம குணங்கள் வாய்ந்த சற்புத்திரனான கந்தசாமி கூட அவ்விதமாக நடந்து கொண்டானே என்ற பெரு வியப்பும் திகைப்பும் அடைந்த வர்களாய் அப்படியே ஸ்தம்பித்துப் போயினர். பட்டாபிராம பிள்ளை, கந்தசாமி பெண் வேஷத்தோடு வந்திருந்த காலத்தில், தாம் அன்னிய ஸ்திரியை ஏறெடுத்துப் பார்ப்பது தகாதென்று நினைத்து அவனை அவ்வளவு நன்றாக கவனிக்காமல் இருந்தவர் ஆதலால், அவர் அந்தப் படத்தை வாங்கித் தமது கையில் வைத்துக் கொண்டு இமை கொட்டாமல் வெகு நேரம் வரையில் அதை உற்று உற்று நோக்கி அதன் அழகில் ஈடுபட்டவராய் மெய்ம்மறந்து போய், அதன் சிகை முதல் கால் நகம் வரையில் மேலும் கீழும் நூறுதரம் பார்த்து, "ஆகா! என்ன அழகு! என்ன அழகு! இவ்வளவு அழகுடைய பெண் இந்த உலகத்தில் இருப்பாளா என்பதே சந்தேகம் ரதிதேவியை இவருடைய காலில் கட்டியடிக்க வேண்டும். ஐயோ! இவருடைய புருவவில், கண்கள், பல்வரிசை, மூக்கு முதலிய ஒவ்வொன்றையும் எவ்வளவு நாழிகை பார்த்தாலும், அததையே பார்த்துக் கொண்டிருக்கும்படி அல்லவா ஒவ்வொன்றும் தெவிட்டாத அழகுத்திரளாய் அமைந்திருக்கிறது. ஆகா! என்ன வசீகரமான முகம் உலகத்தில், கற்கண்டு, பாகு, தேன், தேவாமிருதம் முதலியவைகள் இனிப்பென்று ஜனங்கள் கருதுகிறார்களே! இந்த வடித்தைப் பார்க்கும் போது தானாகவே என் மனதில் அமிர்த ஊற்று பெருக்கெடுத்து, இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவித இன்பம் சுரக்கும்படி செய்கிறதே! அழகு என்பது உண்மையில் இதுவேயன்றி மற்றதெல்லாம் அமுகல்ல. இவரையும் பார்த்து என் மகளையும் பார்த்தால், இருவருக்கும் எந்த மூலைக்கு எந்த மூலை! இவர் என் மகளின் மீது ஆசை கொள்ளப் போகிறாரா? ஆகா மகா அற்புத சிருஷ்டியில் சேர்ந்த இந்த உத்தம புருஷர் எங்களை மதித்து எங்களைப் பார்க்கும் பொருட்டு எங்கள் வீட்டை நாடி வந்த