பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 மாயா விநோதப் பரதேசி காலத்தில், இவருக்குத் தக்க உபசரணை புரிந்து, இவருடைய மனம் எங்கள் மேல் பிரியம் கொள்ளும்படி செய்ய வேண்டிய திருக்க, அதை விட்டு, இவரைப் போலீசாரிடம் ஒப்புவித்து சிறைப்படுத்தி, எவ்விதமான அவமானத்திற்கும் அவமரியாதைக் கும் ஆளாக்கி விட்டோம். அடடா என்ன மூடத்தனம் செய்து விட்டோம்! நல்ல சமயத்தில் மதியினம் வந்து இப்படித் தானா மூடிக் கொள்ள வேண்டும்! இவர் என்றைக்கும் மறக்காதபடி அல்லவா, நாங்கள் மகா கேவலமாக நடந்து கொண்டோம். ஆயினும், இவர் பெருந்தன்மை வாய்ந்தவர் என்பது நன்றாகத் தெரிகிறது. இவருடைய குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுடைய குணமும் ஒழுக்கமும் எப்படி மகா சிரேஷ்டமாக அமைந்திரு கின்றனவோ, அது போலத் தானே இவருடைய குணாதிசயங் களும் அமைந்திருக்கும்; இவர் முக்கியமாக பெற்றோர் பெரியோருடைய சொல்லை மீறி நடப்பவரல்லர் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். ஆகவே, நாங்கள் இவருடைய விஷயத்தில் கொடிய தவறுகள் செய்து, இவரை நிரம்பவும் அவமரியாதைப் படுத்தியிருந்தும், என் மகள் மனோன்மணி யம்மாள் இவருடைய மனதிற்குச் சிறிதும் ஒவ்வாத நடையுடை பாவனைகள் உடையவளாய் இருந்ததைக் கண்டும், இவர் எங்களிடம் வெறுப்புக் கொள்ளாமல், எங்கள் சம்பந்தத்தை நாடியே இருக்கிறார் என்பது, இவர் இதனடியில் கூேடிம சமாசாரம் எழுதி அதை என் மகளுக்கு நேரில் அனுப்பி இருப்பதிலிருந்து நன்கு விளங்குகிறது. என்னவோ, நாங்கள் இந்த ஜென்மத்தில் இதுவரையில் கடவுளை நினையாமல் நீச ஒழுக்கத்தை மேற் கொண்டு, எங்கள் ஆயிசு காலத்தில் பெரும் பாகத்தையும் போக்கி விட்டோம் ஆனாலும், நாங்களும், எங்கள் முன்னோர்களும் பூர்வ ஜென்மங்களில் செய்த பூஜா பலனே இப்படிப்பட்ட பெருத்த பாக்கியம் எங்களுக்குக் கிடைக்கும்படி செய்திருக்க வேண்டு மன்றி வேறல்ல. நல்ல வேளையாக என் மகள் மனோன்மணி யம்மாளும் தன்னுடைய துராசரங்களையும், துர் அபிப்பிராயங் களையும் வெகு சீக்கிரத்தில் விலக்கி விட்டு, சரியான வழிக்குத் திரும்பி விட்டாள். கற்பிற்கரசிகளான திரிபுரசுந்தரியம்மாள், வடிவாம்பாள் முதலியோருடைய மகா அற்புதமான வசீகர சக்தி