பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 257 அது முதல் அதை நினைக்கும் போதெல்லாம் என்னுடைய மனம் அப்படியே பொங்கிப் போகிறது. உடம்பு பரவசம் அடைந்து விடுகிறது. நான் தான் பெண் வேஷம் போட்டுக் கொண்டு வந்தேன் என்பதை நீ கடைசி வரையில் சொல்லாமல், அவர்கள் உன்னைக் குழியில் போட்டு மேலே மண்ணைத் தள்ளும் போது கூட நீ பிணம் போலவே இருந்தாயாமே. ஆகா! கோபாலசாமி! கோபாலசாமி! நீயே உண்மையான தீரன்! நீயே உண்மையான ஆண்மகன்! நீயே உண்மையான சிநேகிதன்! நீயே உண்மையான புருஷ சிங்கம்! ஆகா! நீ என் விஷயத்தில் வைத்திருக்கும் வாஞ்சை எவ்வளவு உறுதியானது என்பதை நீ நன்றாய்க் காட்டினாய்! உன்னுடைய உயிரைக் கொடுத்தாவது என்னுடைய மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற மகா அற்புதமான மனோதிடத்தோடு நடந்து கொண்ட உன்னை நான் என்னவென்று புகழுகிற தென்பது தெரியவில்லை. கோபாலசாமி! உலகத்தில் மற்றவரும் சிநேகிதர் நீயும் சிநேகிதனா! ஆகா! உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வதென்பது தெரியவில்லை. உனக்கு நான் என் உயிரையும் கொடுப்பேன் என்று சொல்வது கேவலம் மகா அற்ப சன்மான மாகத் தோன்றுகிறது; செய்கையிலேயே நீ எனக்காக உன் உயிரை விட்டுக் காட்டினாயே! அப்பேர்ப்பட்ட மனப்போக்குடைய உன்னிடம் நான் என் உயிரை உனக்காகக் கொடுப்பேன் என்று சொல்வது, உனக்கு அவ்வளவு பிரமாதமாகத் தோன்றாது. அல்லது, உனக்கு லட்சம் பத்து லட்சம் பொருள் கொடுப்பதாக நான் சொல்வது, கேவலம் நீ கூலிக்கு வேலை செய்பவன் என்று சொல்வது போலத் தோன்றும்; என் விஷயத்தில் நடந்து கொண்ட மகா அபூர்வமான மாதிரியைப் பற்றி நான் என்ன சொல்வ தென்ப தாவது என்ன செய்வதென்பதாவது தெரியவில்லையே; நான் என்ன செய்வேன்" என்று நிரம்பவும் தழுதழுத்து நெகிழ்ந்த குரலில் கூறினான். அதைக் கேட்ட கோபாலசாமியின் ஆவேசமும் உருக்கமும் முன்னிலும் பன்மடங்கு பெருகின. அவனது கண்கள் முன்னிலும் அபாரமாகக் கண்ணிரை வழிய விட்டன. அவன் வாய் திறந்து பேச மாட்டாமல் தத்தளித்து, பத்து நிமிஷ நேரம் வரையில் அப்படியே ஒய்ந்து பேசாமல் நிற்க, அவனது மன எழுச்சியும், உணர்ச்சிகளும் மா.வி.ப.ii-17