பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 மாயா விநோதப் பரதேசி சிறிது தணிவடையத் தொடங்கின. அவன் மிகுந்த ஆவலும் விரைவும் காட்டி, "அப்பா கந்தசாமி எனக்கு நீ உபசார வார்த்தை கூடச் சொல்ல வேண்டுமா? நான் உபசார வார்த்தையையாவது, அல்லது, பிரதி உதவியையாவது கருதி இப்படி நடந்து கொண்டவ னல்ல என்பது உனக்கு நன்றாகத் தெரியும். நான் அந்தச் சமயத்தில் செய்தது சிரேஷ்டமான காரியம் என்று நீ நினைத்து சந்தோஷப் பட்டால், அதுவே எனக்குப் போதுமானது. அதைவிட வேறு எதையும் நான் கோரவில்லை. அதிருக்கட்டும் கந்தசாமி! பங்களாவில் இருக்கிறவர்கள் இன்றைய தினம் நீ அவசியம் வருவாய் என்று ஆவலோடு உன் வருகையை எதிர்பார்த்து நெருப்பின் மேல் நிற்பவர் போலத் தவித்திருக்கிறார்கள். வா, பங்களாவுக்குப் போவோம் சீக்கிரமாக" என்று கந்தசாமியின் கையைப் பிடித்திழுக்க, அவன் சந்தோஷமாகப் புன்னகை செய்து, "அடேய் கோபாலசாமி! எனக்கு அங்கே வர வெட்கமாக இருக்கிறது: என் கால் பின்னுக்கு இழுக்கிறதே யொழிய முன்னுக்குப் போகமாட்டேன் என்கிறது" என்று நயமாகக் கூறினான். கோபாலசாமி, "அப்படியானால், நீ இவ்விடத்திலேயே இரு. நான் ஒரே ஒட்டமாக ஒடி, நீ வந்திருப்பதாகச் சொல்லி அவர்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று நிரம்பவும் துடியாகக் கூறி, பங்களவை நோக்கி ஓடுவதற்கு அறிகுறியாக இரண்டோரடி எடுத்து வைத்தான். உடனே கந்தசாமி எட்டி அவனைப் பிடித்து நிற்க வைத்த, "இரு, கோபாலசாமி! போகலாம். இன்னம் வெளிச்சமாக இருக்கிறது விளக்கு வைத்த பிறகு போகலாம். நான் மெயில் வண்டியில் இன்று காலையி லேயே இந்த ஊருக்கு வந்துவிட்டேன். நாம் செய்த காரியம் இவ்வளவு துரம் பகிரங்கத்திற்கு வந்த பிறகு, எனக்கு முக்கியமாக அப்பா, அம்மா, அண்ணன், இந்தப் பட்டாபிராம பிள்ளை முதலியோரை எப்படிப் பார்க்கிறது என்ற ஒருவித லஜ்ஜை வந்து போராடுகிறது. கோமளேசுவரன் பேட்டையில் யாரும் இல்லை என்பது தெரியும். ஆனால், நான் அங்கே போனால், எனக்குத் தெரிந்தவர்கள் உடனே இங்கே வந்து நான் வந்திருப்பதாகச் சொல்லிவிடப் போகிறார்களே என்று நான் அங்கே போகாமல், பட்டணத்தில் மறைவாக ஒரிடத்தில் இருந்து, இப்போது தான்