பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 மாயா விநோதப் பரதேசி அதைக் கேட்ட கந்தசாமி சந்தோஷத்தினால் மலர்ந்த முகத்தோடு பேசத் தொடங்கி, பெண் வேஷத்தோடு வந்திருந்த தன்னை பட்டாபிராம பிள்ளையும் மனோன்மணியம்மாளும் தனியாக வைத்துக் கதவை வெளியில் தாளிட்டுக் கொண்டு போனது, பிறகு நடு இரவில் முரட்டு மனிதர்கள் வந்து மயக்க மருந்தை முகரச் செய்தது, பிறகு தன் மயக்கம் தெளிந்த போது தான் கும்பகோ ணத்தில் இருந்தது, அவ்விடத்தில் திங்கட்கிழமை அன்று தனக்கும் மாசிலாமணிக்கும் கலியாணம் நடந்தது, பிறகு செவ்வாய்க்கிழமை அன்று, அவன் சோபனக் கலியாணத்திற்காக ஏற்பாடுகள் செய்தது, பிறகு தானும் அவனும் சோபன அறையில் சந்தித்தது, அவ்விடத்தில் இருவருக்கும் சம்பாஷணை நேர்ந்தது, தான் அவனிடம் தன்னைப் பற்றி பொய்யான வரலாற்றைச் சொல்லி, சோபனக் கலியானத்தை மறு நாளைக்கு மாற்றிக் கொண்டு அவ்விடத்தை விட்டு முன்னிருந்த அறைக்கு வந்தது முதலிய வரலாறுகளை எல்லாம் விரிவாகக் கூறி, மேலும் பேசத் தொடங்கி, "அப்பா கோபாலசாமி! நாம் எந்த வேளையில் பெண் வேஷம் போட எண்ணினோமோ! அது இப்படிப்பட்ட அநர்த்தத்தை எல்லாம் கொண்டு வந்துவிட்டது. நீ என் புருஷன் என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தும், சமயத்தில் என்னைக் காப்பாற்ற முடியாத நிலைமையில் இருந்தாய். ஆனாலும் நான் அந்தத் துஷ்டனுடைய கைகூட என் மேல் படாதபடி தந்திரம் செய்து மகா பதிவிரதா சிரோன்மணியாகவே திரும்பி வந்து சேர்ந்தேனப்பா! அதைப் பற்றி நீ தான் உண்மையில் சந்தோஷப்பட வேண்டிய வன். நான் மாசிலாமணியை விட்டுப் பிரிந்து போனேன் அல்லவா? அந்த அசுரனுடைய சோபன அறைக்குள் கொஞ்ச நேரம் இருந்து அந்த அத்தர், புனுகு முதலியவற்றின் அபாரமான வாசனையை முகர்ந்தது என்னால் தாங்கவே முடியாமல் போய்விட்டது. எனக்கு மயக்கம் வந்து தலையைச் சுற்றியது. அந்த நிலைமையில், "அவன் வெள்ளிக்கிழமை அன்று செய்ய எண்ணி இருந்த பயங்கரமான சதியாலோசனையைக் கேட்கவே, என்னால் நிற்கக் கூட முடியாமல் போய்விட்டது. என் மனம் பதறித் தத்தளித்தது. எப்படியாவது நான் அவ்விடத்தை விட்டு உடனே தப்பித்து, மன்னார்குடிக்குப் போய், அவர்கள் செய்த காரியத்தையும்,