பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 261 செய்ய எண்ணியிருந்த பயங்கரமான காரியங்களையும் தெரிவித்து, அதற்குத்தக்க முன் ஜாக்கிரதையான காரியங்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்து என் மனம் பறந்தது. உடனே நான் வெளியில் போனால் யாராவது விழித்திருந்து நான் போவதைக் கண்டு, என்னைப் பிடித்துக் கொள்ளப் போகிறார் களே என்று நினைத்து நான் இரவு பன்னிரண்டு மணி வரையில் பொறுத்திருந்தேன். என்னுடைய பெண் வேஷத்தைக் கலைத்து விட்டு, வேஷ்டிகள் கட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் போக வேண்டும் என்ற எண்ணம் உதித்ததானாலும், ஆணுடையோடு நான் வெளியில் போகும் போது என்னை அவர்கள் கண்டால் திருடன் என்று மதிப்பார்கள் என்ற எண்ணம் உதித்தது. ஆகை யால், அப்படிச் செய்ய நான் விரும்பவில்லை. அதுவுமன்றி, வேஷ்டிகளும் அவ்விடத்தில் காணப்படவில்லை. ஆகவே, நான் பெண்ணுடையோடு மன்னார்குடிக்குப் போய், அவ்விடத்தில் வேஷ்டி கட்டிக்கொண்டு, மாசிலாமணியின் ஆடையாபரணங் களை, இன்னார் அனுப்பியது என்ற குறிப்பே தெரியாதபடி, மாசிலாமணிக்கு அனுப்பிவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, இரவு 12-மணி சுமாருக்கு மெதுவாக எழுந்து வாசற் கதவைத் திறந்து கொண்டு வெளியில் போய், முன்னும் பின்னும் திரும்பிப்பார்த்தபடி தெருவோடு ஒட்டமும் நடையுமாகப் போனேன்; எங்கேயாவது குதிரை வண்டி கண்ணில் படுகிறதா என்று பார்த்தேன். அது அர்த்தராத்திரி வேளை ஆகையால் எங்கும் வண்டியே கிடைக்கவில்லை. நான் ஒரே நடையாக நடந்து ரயில் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தேன். அவ்விடத்தில் நாலைந்து குதிரை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. ஒரு வண்டிக்காரனை அழைத்து, வண்டி மன்னார்குடிக்கு வருமா என்றேன். அவன் நீடாமங்கலம் வரையில் தான் வரும் என்றான். அதுவரையில் போய், அவ்விடத்தில் வேறு வண்டி அமர்த்திக் கொண்டு போகலாம் என்று தீர்மானித்துக் கொண்டு நான் அந்த வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு, வண்டியை அவசரமாக ஒட்டும்படி செய்தேன். வண்டிக்காரன் அன்று மாலையில் நாலைந்து கட்டுகள் பச்சைப் புல் வாங்கி வண்டி முழுதும் பரப்பி, அதன்மேல் ஒரு பெரிய கோணியை விரித்திருந்தான். அதன் மேல்