பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 மாயா விநோதப் பரதேசி உட்கார்ந்தது மெத்தையின் மேல் இருப்பது போலத் தோன்றியது. குதிரையும் விசையாய் ஒடியதாகையால், நான் அப்படியே சாய்ந்து படுத்தேன். பசுமையான புல்லின் மேல் படுத்தது; குளிர்ச்சியாகவும் சுகமாகவும் இருந்தது. வண்டி விசையாக ஒடியதில் என் உடம்பு அங்குமிங்கும் ஆடியசைந்தது. கோணி வழுக்கிக் கொண்டு சென்றது. வலங்கிமான் என்ற ஊரைத் தாண்டி அப்பால் சென்று வெட்டாற்றுப் பாலத்தைக் கடந்து ஆலங்குடிக்கு அருகில் போன சமயத்தில், என் காலில் சுரீர் என்று என்னவோ குத்தியது போல இருந்தது. ஒரு வண்டி நெருப்பை அள்ளி ஒரே காலத்தில் என் மேல் கொட்டினால் கூட அவ்வளவு கஷ்டம் இருந்திராது. நான் உடனே "ஐயோ! என்னவோ கடித்துவிட்டதே: என்று அலறிக் கொண்டு எழுந்து வண்டியை விட்டுக் கீழே குதித்தேன். அந்த விபரீத ஓசையைக் கேட்டு வண்டிக்காரன் திடுக் கிட்டு வண்டியை நிறுத்திவிட்டு முன்னால் இருந்த லாந்தரை எடுத்துக் கொண்டு பின்பக்கம் ஓடி வந்து, "என்ன அம்மா?" என்றான். அதற்குள் என் உயிர் துடிக்கும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. என் உடம்பு முழுதும் குபிரென்று வியர்த்து ஜலமாய் ஒடுகிறது. வாய் நுரை நுரையாகத் தள்ள ஆரம்பித்தது; கைகால் உடம்பெல்லாம் வெட வெடவென்று நடுங்க ஆரம்பித்தன. நான் உடனே வண்டிக்காரனைப் பார்த்து, "வண்டிக் குள் இருந்து என்னவோ சுருக்கென்று கடித்த மாதிரி இருந்தது. வலி நிமிஷத்திற்கு நிமிஷம் அதிகரிக்கிறது. என்னால் நிற்கக்கூட முடியவில்லை. வாயிலிருந்து நுரை நுரையாக வருகிறது. நெஞ்சு. காய்ந்து போகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் பிராணன் போய்விடும் போலிருக்கிறது" என்றேன். அதைக் கேட்ட வண்டிக் காரன், என்னை ஒரு பக்கமாக உட்காரச் செய்துவிட்டு கையில் ஒரு தடிக்கம்பை எடுத்துக் கொண்டு வண்டியில் இருந்த புல்லை ரஸ்தாவில் தள்ளிவிட்டு, கொஞ்சம் தூரமாக விலகி நின்று கோலினால் புல்லைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரித்து விட்டுப் பார்த்துக் கொண்டே போக, புல்லிற்குள் கன்னங்கரேலென்று கருத்து ஒரு சாண் நீளமிருந்த ஒரு நட்டுவாய்க்காலி (நண்டுத்தெருக் கால்) விருவிரென்று ரஸ்தாவில் ஒட ஆரம்பித்தது. அந்த மகா பயங்கரமான ஜெந்து என் காலில் பலமாகக் கொட்டிவிட்ட