பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 263 தென்பதை நான் உடனே உணர்ந்து கொண்டேன்; வண்டிக் காரனும் உணர்ந்து கொண்டான். அந்த ஜெந்துவைப் பார்க்கும் போதே எனக்குக் குலை நடுக்கம் உண்டாகிவிட்டது. ஆனால், வண்டிக்காரன், "அம்மா! நல்ல வேளை தான். ஏதாவது பாம்பு கடித்திருக்குமோ என்று என் மனம் நிரம்பவும் தவித்துப் போய் விட்டது. நல்ல வேளைதான். நீங்கள் தப்பினர்கள். இது கொட்டி னால், உயிருக்கு அபாயமில்லை. இரண்டொரு நாளைக்குக் கொஞ்சம் உடத்திரவமாக இருக்கும்; பிறகு சரிப்பட்டுப் போகும். இதைப்பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம்" என்று கூறிய வண்ணம் அந்த நட்டுவாய்க்காலியை இரண்டு மூன்று அடிகளில் அடித்துக் கொன்று ரஸ்தாவிற்கு அப்பால் தூக்கி எறிந்துவிட்டு, புல்லை நன்றாகத் தட்டி சோதனை செய்து, வேறு கெடுதல் எதுவுமில்லை என்று நிச்சயித்துக் கொண்டு அதையும் கோணியையும் மறுபடி வண்டியில் போட்டு அதன்மேல் என்னை உட்காரச் செய்து, "அம்மா இதோ பக்கத்தில் ஆலங்குடி என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ஏகாம்பர முதலியார் என்று ஒரு பெரிய மிராசுதார் இருக்கிறார். அவருடைய வீட்டிற்கு நாம் போவோம். அந்த ஊரில் இதற்கு யாராவது வைத்தியம், மாந்திரீகம் தெரிந்தவர்கள் இருப்பார்கள்" என்று சொல்லி என்னை அழைத்துக் கொண்டு அந்த மிராசுதாருடைய வீட்டிற்குப் போய், அயர்ந்து துங்கிக் கொண்டிருந்த அந்த மனிதரை எழுப்பி விஷயத்தை அவரிடம் சொன்னான். அவர் நிரம்பவும் தயாள குணமுடையவர். அதுவுமன்றி, நான் ஏராளமான நகைகளையும் உயர்ந்த உடை களையும் தரித்து ராஜ ஸ்திரி போல இருந்ததைக் கண்டு அவர் துடிதுடித்து, என்னை அவருடைய வீட்டிற்குள் அழைத்துப் போய் ஒரு படுக்கையில் படுக்க வைத்தபின், தாம் என்னிடம் வரக்கூடாது என்று நினைத்து, தமது வீட்டில் உள்ள ஸ்திரிகளை எல்லாம் என்னிடம் வந்து, எனக்கு உபசரணை செய்யுமாறு அவர் கூப்பிட்டார். நான் அதற்கு இடங் கொடுக்கக் கூடாதென்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய உண்மையான வரலாற்றையும் சொல்ல என்னால் கூடவில்லை; அதைச் சொல்வது அசங்கியமாகவும் தோன்றியது. ஆகையால், நான் அவரைப் பார்த்து, "ஐயா! உங்கள் வீட்டு