பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 மாயா விநோதப் பரதேசி ஸ்திரிகளை என்னிடம் அனுப்ப வேண்டாம். நான் பெண்பிள்ளை அல்ல; ஒரு காரணத்தை முன்னிட்டு நான் பெண் வேஷம் போட்டுக் கொண்டேன். அதை நான் உங்களிடம் பிற்பாடு தெரிவிக்கிறேன். நீங்கள் எனக்கு உடனே இரண்டு வஸ்திரங்கள் கொடுக்க வேண்டும். அதுவுமன்றி, என் பிராணன் போய்விடும் போல இருக்கிறது. இதற்கு ஏதாவது மருந்து போடும்படி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன். நான் சொன்னதைக் கேட்டு அந்த மனிதர் ஆச்சரியமடைந்தார் ஆனாலும், என்னுடைய ஒழுங்கான நடத்தையைக் கண்டு என்மேல் நல்ல அபிப்பிராயம் கொண்டு, உடனே எனக்குச் சலவை செய்த இரண்டு வஸ்திரங்களைக் கொடுத்தார். நான் என் பெண் வேஷத்தை எல்லாம் ஐந்து நிமிஷத்தில் கலைத்து ஆடையாபர ணங்களை மூட்டையாகக் கட்டி ஒரு பக்கத்தில் வைத்து விட்டு அவர் கொடுத்த வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டேன்; அவர்கள் கொடுத்த ஜலத்தை வாங்கி ஏராளமாகச் சாப்பிட்டு விட்டு அப்படியே படுத்துக் கொண்டேன். அதற்குள் விஷம் உடம்பு முழுதும் பரவி மரணாவஸ்தை போல என்னை வதைக்கத் தலைப்பட்டது. வாயில் நுரை வந்து கொண்டே இருந்தது. உடம்பு முழுதும் வியர்வை வெள்ளமாக வந்தது ஆனாலும், நெருப்பாய்ப் பற்றி எரியத் தொடங்கியது. நான் பல்லைக் கடித்துப் பொறுத்துப் பார்த்தேன். என்னால் அந்த பாதையைத் தாங்க முடியவில்லை. அன்னியர் பக்கத்தில் இருக்கிறார்களே என்பதையும் கவனிக்காமல் நான், "ஐயோ! அப்பா! அம்மா" என்று வாய்விட்டுக் கதறி அலறத் தொடங்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் அந்த ஊரில் உள்ள சகலமான வீட்டாரும் வந்துகூடி என்னுடைய நிலைமையை உணர்ந்து அவர்களுக்குத் தெரிந்த மருந்துகளைக் கொடுக்கத் தொடங்கினர்; வேறு சிலர் வேப்பிலையை வைத்துக் குழையடித்து மந்திரிக்கத் தொடங்கினர். ஆகா! அந்த வேப்பிலையின் குணத்தை நான் அப்போதே உணர்ந்தேன். சகலமான அவஸ்தைகளுக்கும் பாமர ஜனங்கள் வேப்பிலையை வைத்துக் குழையடிப்பதைக் கண்டு நாம் அவர்களைப் புரளி செய்தோமே; அந்த வேப்பிலையின் காற்று படும்போதெல்லாம், அந்த வலி அவ்வளவு அதிகமாக உறைக்காமல் நிரம்பவும் இதமாக