பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 265 இருந்ததோடு விஷமும் அதிகமாய்ப் பரவாமல் அது தடுப்பது போலத் தோன்றியது. ஆகவே பொழுது விடிகிற வரையில், நாலைந்து ஆள்கள் என் பக்கத்தில் உட்கார்ந்து ஒருவர் மாறி ஒருவர் குழையடித்துக் கொண்டும், வாயில் தண்ணி வார்த்துக் கொண்டும், வேறு பல மருந்துகளைக் கொடுத்துக் கொண்டும் இருந்தனர். ஆனாலும் அந்த இரவு நான் அனுபவித்தது நரக வேதனை என்றே சொல்ல வேண்டும். நெருப்பில் கிடந்து துடிக்கும் புழுவைப் போல நான் கிடந்து தவித்ததைக் கண்ட அந்த மிராசுதார் நிரம்பவும் இரங்கித் தத்தளித்து ஒர் ஆளை உடனே அழைத்துச் சுமார் பத்து மைல் துரத்திற் கப்பால் இருந்த அம்மாபேட்டைக்கு அனுப்பி அவ்விடத்திலிருந்த ஒரு பிரபல வைத்தியரை அழைத்து வரச் செய்தார். அவர் மறுநாட் காலையில் வந்து சேர்ந்து என்னுடைய அவஸ்தையைக் கண்டு ஏதோ சில மருந்துகளைப் பிரயோகம் செய்தார். அவரை வருவித்த மிராசுதார் வைத்தியரைப் பார்த்து, "இந்த விஷம் உடனே இறங்கா விட்டாலும் பரவாயில்லை; மெதுவாக இறங்கட்டும். இவர் இந்த வலியின் உபத்திரவத்தை உணராமல் இருக்க ஏதாவது மருந்து இருந்தால் கொடும்" என்றார். அவர் முரட்டு மனிதர்களுக்கே மருந்து கொடுத்துக் கொடுத்துப் பழகிய பட்டிக்காட்டு வைத்தியர் ஆகையால், என் உடம்பு மகா நுட்பமான தன்மையுடையது என்பதை அறியாமல், அபினி கலந்திருந்த ஒரு மருந்தில் கொஞ்சம் அதிகமாகவே எடுத்துக் கொடுத்து விட்டார். அதற்கு முன், மாசிலாமணியின் சோபன அறையிலிருந்த அபரிமிதமான வாசனையைத் தாங்கமாட்டாமல், என் மூளை கலங்கிப் போயிருந்தது. அந்த நிலைமையில் மாசிலா மணி வெள்ளிக்கிழமை அன்று எங்களுக்குச் செய்ய எண்ணி இருந்த சதியாலோசனையைக் கேட்ட அதிர்ச்சியை நான் தாங்க மாட்டாதவனாய் இருந்தேன். அந்த நிலைமையில் அவ்விடத்தி லிருந்து பயந்து பயந்து தப்பி வந்த கலக்கமும் சேர்ந்தது. அதோடு நட்டுவாய்க்காலி கொட்டியது என்மேல் இடி விழுந்தது போல என் உடம்பையும் மூளையையும் சிதற அடித்து சின்னாபின்ன மாக்கி விட்டது. அதில் அபினியும் சேரவே, என் மூளை தளர்ந்து அப்படியே விழுந்து போய்விட்டது. எனக்கு உடனே பிரக்ஞை