பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 மாயா விநோதப் பரதேசி தவறிப் போய்விட்டது. அதன் பிறகு என்ன நடந்த தென்பதே எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நான் அபினி மருந்து சாப்பிட்டது புதன்கிழமையல்லவா. அடுத்த புதன்கிழமை தான் என் மயக்கம் கொஞ்சம் தெளிய ஆரம்பித்தது. அந்த ஒரு வாரம் நான் கண்களைத் திறக்கவே இல்லையாம். மற்றவர்கள் கூப்பிட்ட தற்கும் நான் பதில் பேசவே இல்லையாம். ஆனால், கைகால்கள் அப்போதைக்கப்போது அசைந்து கொண்டிருந்தனவாம். மூச்சு சொற்பமாக வந்ததாம். அவர்கள் கஞ்சியையும் பாலையும் பலவந்தமாக என் தொண்டைக்குள் செலுத்தினார்களாம். அந்த மிராசுதார் நான் பிழைப்பேனோ மாட்டேனோ என்று எண்ணி, பெருத்த கிலி கொண்டு அந்த ஒரு வாரம் இரவு பகல் தூக்க மில்லாமல், படாத பாடெல்லாம் பட்டாராம். எனக்குக் கொஞ்சம் தெளிவு உண்டானதும், பிறகு அது மறைவதுமாக இருந்ததாம். போன வெள்ளிக்கிழமை முதல் கும்பகோணத்திலிருந்து ஒரு பிரபல டாக்டரை வருவித்து எனக்கு வைத்தியம் செய்தார்கள். அவர் இங்கிலீஷ் வைத்திய முறையோடு ஆயுர்வேத சாஸ்திரம் முறையிலும் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர். அவர் காலை மாலை கும்பகோணத்தில் இருந்து ஆலங்குடிக்கு வந்து பலவித சிகிச்சைகள் செய்து, தாதுபுஷ்டி மருந்துகள் கொடுத்து, விழுந்து போன என் மூளையையும், நரம்புகளையும் மறுபடி சரியான நிலைமைக்குக் கொண்டு வந்தனர். ஞாயிற்றுக்கிழமையே எனக்கு பழைய நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆனாலும், அன்றைய தினமும் இருந்து திங்கட்கிழமை அன்று புறப்பட்டு நான் ஊருக்கு போகலாம் என்றார். நான் தெளிவு அடைந்த பிறகு அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து, நான் 12, 13-தினங்கள் படுத்த படுக்கை யாக இருந்தேன் என்று தெரிந்து கொண்டேன். அதை உணரவே என் மனம் அளவிட முடியாத வேதனையும் கவலையும் கொண்டது. நிச்சயதார்த்தத்திற்காகக் குறிக்கப்பட்டிருந்த தினமாகிய வெள்ளிக்கிழமை அன்று என் தகப்பனார் முதலியோருக்கு மாசிலா மணி ஏதாவது கெடுதல் செய்திருப்பானோ என்ற அபாரமான சஞ்சலம் தோன்றி வதைக்க ஆரம்பித்தது. அப்போது நானும் அந்த டாக்டரும் தனியாக இருந்தோம். அவர் என்னைப் பார்த்து, "அப்பா உன் பெயரென்ன?" என்றார். நான் "கந்தசாமி" என்றேன்.