பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 267 அவர் உடனே என்னைப் பார்த்து, "நீ மன்னார்குடி வேலாயுதம் பிள்ளையின் இரண்டாவது மகனல்லவா?" என்றார். அதைக் கேட்ட எனக்கு நிரம்பவும் ஆச்சரியமாகிவிட்டது. நான் மிகுந்த ஆவல் கொண்டு, "ஐயா! இந்த விவரமெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றேன். அதற்கு அவர், "அப்பா கந்தசாமி பட்டணத்திலிருந்து எனக்குத் தினம் தினம் சமாசாரப் பத்திரிகை வருகிறது. சில தினங்களுக்கு முன் சென்னை கலெக்டர் பட்டாபிராம பிள்ளையின் வீட்டில் நடந்த ஒர் அதிசயச் சம்பவம் பத்திரிகையில் வெளியாயிருந்தது. வேலாயுதம் பிள்ளையின் மைத்துணி புருஷனென்று சொல்லிக் கொண்டு வந்த ஆண்பிள்ளை அடிபட்டு பிரக்ஞையற்று ஆஸ்பத்திரியில் கிடப்பதாக அந்தப் பத்திரிகையில் சொல்லப்பட்டிருந்தது. இந்த ஊரிலிருந்து ஒரு பெரிய மனிதர் ஒரு முக்கியமான வியாதியைக் குறித்து வைத்தியம் செய்து கொள்ள, சென்னப்பட்டணம் பெரிய ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தார். அவர் குணமடைந்து, இரண்டு தினங்களுக்கு முன் கும்பகோணத்திற்கு வந்தார். அவர் பட்டணம் பெரிய ஆஸ்பத்திரியின் வேடிக்கைகளை எல்லாம் சொன்ன போது, மிஸ்டர் வெல்டன் என்ற டாக்டர் துரை ஒருவர் வந்து அபூர்வமான காரியங்கள் செய்ததாகச் சொன்னார். அப்போது வேலாயுதம் பிள்ளையின் மைத்துணி புருஷனென்று பட்டாபிராம பிள்ளையின் வீட்டிற்குப் போய் அடிபட்டுப் பிரக்ஞையற்றுக் கிடந்த மனிதனை அந்த வெல்டன் துரை தந்திரமாகக் கிளப்பி, அவனைப் பேசும்படி செய்து, அவனுடைய ரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்திய மாதிரியைச் சொன்னார்" என்று சொல்லி, நீ வேண்டுமென்றே பிரக்ஞை தவறியவன் போல பாசாங்கு செய்து, சாப்பிடாமலே பல தினங்கள் இருந்ததாகவும், கடைசியில் மிஸ்டர் வெல்டன் துரை வந்து நீ இறந்து போனதாகச் சொல்லி உன்னைக் குழியில் போட்டு மண்ணைத் தள்ளியபடி நான் இறந்து போனதாகப் பொய் சொன்னதாகவும், அதைக் கேட்ட வுடன், "ஆ, அப்படியா" என்று நீ எழுந்து உட்கார்ந்ததாகவும், பிறகு நீ அவரிடம் உண்மையை வெளியிட்டதாகவும் அந்த நோயாளி தம்மிடம் சொன்னதாக கும்பகோணம் டாக்டர் என்னிடம் சொன்னார். அதைக் கேட்டவுடன் நான் அப்படியே