பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 மாயா விநோதப் பரதேசி பிரமித்துப் போய்விட்டேன். மேலும் அந்த டாக்டர் என்னைப் பார்த்து, "அப்பா கந்தசாமி! நீ அன்றைய தினம் அர்த்தராத்திரியில் பெண் வேஷத்தோடு இங்கே வந்ததாக இவர்கள் சொன்னதைக் கேட்டவுடனே, நான் சமாசாரப் பத்திரிகையில் படித்த விஷயமும், மிஸ்டர் வெல்டன் துரை வெளிப்படுத்தியதாக நான் கேள்வியுற்ற விஷயமும் நினைவிற்கு வந்தன. பெண் பேஷத்தோடு பட்டாபிராம பிள்ளையின் வீட்டிற்குப் போய், அவ்விடத்தில் இருந்து முரட்டு ஆட்களால் அபகரித்துக் கொண்டு போகப்பட்டது நீயாகத் தான் இருக்க வேண்டும் என்ற யூகத்தின் மேல் நான் கேட்டேன். அது சரியாய்ப் போய்விட்டது" என்று சொன்ன தோடு, அவர் வேறு இரண்டு பத்திரிகைகளையும் எனக்குக் காட்டினார். வெள்ளிக்கிழமை இரவில் தாம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக மாசிலாமணி என்னிடம் சொன்னபடி, அவன் ஆட்களை அனுப்பியதில், அவர்கள் வேறே சிலருடைய முக்கு காதுகளை எல்லாம் அறுத்துவிட்டதாக நான் உடனே தெரிந்து கொண்டேன். அந்தக் கொடிய கொலைபாதகனுடைய சதியாலோ சனையால், யாரோ சிலர் அங்கஹரீனம் அடைந்ததைப் பற்றி என் மனம் நிரம்பவும் இரங்கித் தவித்ததானாலும், என் தகப்பனார் முதலியோர் தெய்வாதீனமாய் அந்தப் பெருத்த அபாயத்தில் இருந்து தப்பித்துக் கொண்டதை அறிய, அதற்கு முன் நான் கொண்டிருந்த கவலையும், வேதனையும் விலகின. கும்பகோணம் டாக்டர் இன்னொரு விஷயமும் தெரிவித்தார். என்னுடைய தகப்பனார் முதலிய எங்கள் மனிதர்கள் எல்லோரும் பட்டாபிராம பிள்ளையின் வீட்டிலேயே இருந்து என்னைப் பற்றிக் கவலையுற் றிருப்பதாகத் தெரிகிறதென்றும், நான் நேராக அங்கே போக வேண்டும் என்றும் அவர் வற்புறுத்திக் கூறி, நேற்றைய தினம் இரவு வண்டியில் அவர் டிக்கெட்டு வாங்கிக் கொடுத்து என்னை இந்த ஊருக்கு அனுப்பினார். நான் தரித்துக் கொண்டு வந்த ஆடை ஆபரணங்கள் எல்லாம் மாசிலாமணிக்குச் சொந்தம் ஆகையால், அவைகளை ஒர் ஆள்மூலமாய் மாசிலாமணிக்கு அனுப்பி, இன்னாரிடம் இருந்து அவை வந்தன என்பது தெரியாதபடி அவனிடம் சேர்த்துவிடும்படி அந்த மிராசுதாரிடம் நான் ஏற்பாடு செய்து விட்டு, அவரும் மற்றவர்களும் என் பொருட்டு பட்ட