பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 269 பாடுகளைப் பற்றி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி அறிதலைத் தெரிவித்து, அவர்களை விட்டுப் பிரிய மனமற்றவனாய் நேற்றிரவு வண்டியில் ஏறி இன்று காலை இங்கே வந்து சேர்ந்தேன். நாம் ஏதோ விளையாட்டாகச் செய்ய எண்ணியது இப்பேர்ப்பட்ட பெருத்த அபாயத்தில் கொண்டு போய்விட்டது" என்றான். அவன் சொல்லி வந்த சங்கதிகளைக் கேட்ட கோபாலசாமி கண்ணிர் வடித்துக் கலங்கி அழுது, "அப்பா! கந்தசாமி! உன்னை நட்டுவாய்க்காலி கொட்டியதால் நீ பட்ட அவஸ்தையைக் கேட்கும் போது என் குடல் நடுங்குகிறதப்பா! ஐயோ! உனக்கு என்ன சங்கடம் நேர்ந்ததப்பனே! உன் தகப்பனார் முதலியோர் உன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கச் செய்ததில், ஏதோ கிரகபேதத்தால், உன் உயிரே போகும்படியான நிலைமை ஏற்படும் என்றும், முடிவில் நீ தப்பி வருவாய் என்றும் ஜோசியர்கள் சொன்னார்கள். அது உண்மையாகவே முடிந்தது. பட்ட கஷ்டமெல்லாம் போகட்டும். எப்படியாவது நீ உயிரோடு வந்து உன் முகத்தை எங்களுக்கெல்லாம் மறுபடி காட்டினாயே! அது ஒன்றே போதுமானது. உன் உயிருக்கு ஏதாவது அபாயம் நேர்ந்திருந்தால், முக்கியமாய்ப் பழிக்கு நானே பாத்திரனாவேன். என் பேச்சைக் கேட்டுத் தான் நீ இப்படிப்பட்ட பிரானாபாயத்தில் அகப்பட்டாய் என்று எல்லோரும் என்னை தூவிப்பார்கள். என் மனசும் என்னைக் குத்திக் கொண்டே இருக்கும். போன சனிக் கிழமை இங்கே பூஜை நடந்த காலத்தில் ஒரு பெண்பிள்ளைக்கு ஆவேசம் வந்தது. நீ யாரோ பகைவரிடம் அகப்பட்டு அங்கிருந்து தப்பி வேறிடத்திற்கு போயிருந்தாகவும், அவ்விடத்தில், தடுக்க முடியாத ஏதோ இடையூறினால், நீ உன்னைப்பற்றிய தகவலை வெளியிட மாட்டாமலும், இங்கே வரமாட்டாமலும் இருக்கிற தாகவும், இன்னம் நான்கு தினங்களுக்குள் நீ எப்படியும் வந்து சேருவாய் என்றும், யாரும் கவலையாவது விசனமாவது கொள்ளக் கூடாதென்றும் அந்த அம்மாள் சொன்னாள். அது முதல் எங்கள் எல்லோருக்கும் கொஞ்சம் தைரியம் ஏற்பட்டது. அந்த அம்மாள் குறித்த வாய்தா இன்றோடு முடிவதால், இன்று நீ வருவாய் என்று நாங்கள் எல்லோரும் எண்ணி, ஆவலோடு இன்று காலை முதல் வழி பார்த்துப் பார்த்துச் சாப்பாட்டையும்