பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 மாயா விநோதப் பரதேசி நாடாமல் இருந்து வந்தோம். உன் வழியைப் பார்த்துப் பார்த்து எங்கள் கண்கள் பூத்துப் போயின. பங்களாவில் எனக்கு இருக்கையே கொள்ளவில்லை. அதுவுமன்றி மற்றவர்களுடைய அலங்கோலமான நிலைமையை என் கண்ணால் பார்க்கவும் சகிக்க வில்லை. ஆகையால், நான் புறப்பட்டு இந்தப் பூஞ்சோலைக்குள் வந்தேன்" என்றான். கந்தசாமி, "நீ சொல்வது நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறதே. அந்தப் பெண்பிள்ளை உண்மையை எல்லாம் நேரில் பார்த்தவள் போல் அல்லவா சொல்லியிருக்கிறாள்! இந்தக் கலிகாலத்தில் இப்படியும் சுவாமி பிரத்தியகூஷமாய் வந்து மனிதரோடு பேசுவ துண்டா!" என்று மிகுந்த வியப்போடு கூறினான். உடனே கோபாலசாமி, "அது மாத்திரமல்ல. அந்த அம்மாள் அன்றைய தினமே மனோன்மணியம்மாளுக்கு நல்ல செய்தி வரப்போகிற தென்றும் சொன்னாள். அது போலவே அன்றைய தினம் மனோன்மணியம்மாளுக்கு நீ அனுப்பிய படம் வந்து சேர்ந்தது' என்றான். அதைக் கேட்ட கந்தசாமி நிரம்பவும் துடிதுடித்து வியப்புற்று, "என்ன என்ன நான் அனுப்பிய படமா! நான் படம் அனுப்பியதாக உன்னிடம் எப்போது சொன்னேன்? என்ன படம் அது?" என்று ஆவலோடு கூறினான். கோபாலசாமி முற்றிலும் பிரமிப்படைந்து, "என்ன ஆச்சரியம்! நீ மனோன்மணியம்மாளுக்குத் தபாலில் படம் அனுப்பவில் லையா?" என்றான். கந்தசாமி, "இல்லவே இல்லையே. நானாவது படமாவது அனுப்புவதாவது, என்னிடம் படம் ஏது?" என்றான். கோபாலசாமி திகைத்துக் குழம்பிப் போய், "இது கண்கட்டு வித்தை மாதிரியல்லவா இருக்கிறது, நீ அன்றைய தினம் பெண் வேஷத்தோடு எப்படி இருந்தாயோ அப்படியே ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடியில் இங்கிலீஷில், "க்ஷேமமாய் இருக்கிறேன். நான்கு தினங்களில் வருகிறேன். கவலை கொள்ள வேண்டாம்" என்று டைப் அடிக்கப்பட்டிருக்கிறது" என்றான். அதைக் கேட்ட கந்தசாமி அப்படியே பிரமித்து ஸ்தம்பித்து கோபாலசாமியை உற்றுப் பார்த்தபடி வியப்பே வடிவாக மாறி, "என்ன கோபாலசாமி! இது இந்திர ஜாலம் மகேந்திர ஜாலம்