பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 273 பார்க்க, எல்லாம் நம்முடைய நன்மையைக் கருதி கடவுள் செய்வித்த காரியமாகவே படுகிறது. பெண் வேஷம் போட்டுக் கொண்டு இங்கே வரவேண்டும் என்ற விபரீதமான எண்ணம் நமக்குண்டானதும், நாம் வந்திருப்பதை டெலிபோன் மூலமாய்க் கேட்டவுடனே மன்னார்குடிக்குத் தந்தி கொடுத்து மறுதந்தி வருவிக்க வேண்டும் என்று பட்டாபிராம பிள்ளைக்குப் புத்தி கொடுத்ததும், பிறகு இவர்கள் உன்னை மனோன்மணியம் மாளுடைய அறையிலேயே சிறைப்படுத்தியதும் எல்லாம் கடவுளின் சூழ்ச்சிகள் என்றே நாம் நினைக்க வேண்டி இருக்கிறது. அன்றைய தினம் இம்மாதிரி காரியம் நடந்திராவிட்டால், அவர்கள் அவசியம் மனோன்மணியம்மாளை எடுத்துக் கொண்டே போயிருப்பார்கள். அவ்விடத்தில் எப்படிப்பட்ட விபரீதம் நேர்ந் திருக்குமோ அந்த அசுரனிடத்தில் அகப்பட்டு மனோன்மணியம் மாள் அநேகமாய்த் தன் உயிரையே விட்டிருக்க நேர்ந்திருக்குமன்றி வேறல்ல. கடவுளின் திருவிளையாடல் எவ்வளவு ஆச்சரியகரமாக இருக்கிறது பார்த்தாயா? இந்த மடந்தைக்கு நேர இருந்த மகா பயங் கரமான அபாயத்தை விலக்குவதற்குக் கடவுள் உன்னைப் பொறுக்கி எடுக்க வேண்டிய காரணமென்ன என்பதை நீ யோசித்துப் பார்த்தாயா? நீ தான் இந்தப் பெண்ணுக்கு உரிய புருஷன் என்று கடவுள் நேரில் வந்து சொல்லிவிட்டுப் போனது போல் அல்லவா இருக்கிறது. அவர் இவ்விதம் சூழ்ச்சி செய்ததற்குத் தகுந்தபடி பெண்ணும் உன் மனம் போல சகலமான அம்சங்களிலும் உன்னுடைய அண்ணியைத் தோற்கச் செய்யக் கூடியவளாய் மாறிப் போயிருக்கிறாள். அடேய் கந்தசாமி! நீ மகா பாக்கியசாலியடா! நீ முன் ஜென்மங்களில் மகா அருமையான பூஜை செய்தவனடா சுவாமி இப்படி வேறே யாருக்கும் கண் கூடாக வந்து, இவள் தான் உன் சம்சாரம் என்று காட்டியதை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லையடா’ என்று மிகுந்த வியப்பும் ஆனந்தமும் அடைந்தவனாய்க் கூறினான். அதைக் கேட்ட கந்தசாமி, "அடே! நீ எப்படி எப்படியோ தந்திர மாய்ப் பேசி, மகா வக்கிரபுத்தியுடைய இந்த உபயோகமற்ற பெண்ணைக் கொண்டு வந்து என் கழுத்தில் பிணைக்க முடிவு . செய்து கொண்டிருக்கிறீர்கள். அன்றைய தினம் நான் அவளை lam.si.u.IIf–18