பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274. மாயா விநோதப் பரதேசி நேரில் பார்த்து அவளோடு பேசவில்லையா? அவளாவது மாறுபடு கிறதாவது? அவளுடைய மனப்போக்கை மாற்ற யாராலும் முடியாது. அவள் கட்டியிருக்கும் மஸ்லின் புடவையை அவள் விலக்கும்படி செய்ய கடவுளால் கூட முடியும் என்று நான் நினைக்கவில்லை" என்று பரிகாசமாகக் கூறினான். கோபாலசாமி முற்றிலும் நயமாகவும் உருக்கமாகவும் பேசத் தொடங்கி, "அடே கந்தசாமி! இனி இம்மாதிரியான வார்த்தைகளை நீ வாயில் வைத்துப் பேசாதே; உன் தகப்பனார் முதலியோர் இந்த பங்களாவிற்கு வருவதற்கு முன்பே, மஸ்லின் ஆடை எல்லாம் போய்விட்டது. அவள் தன்னிடம் இருந்த இங்கிலிஷ் புத்தகத்தை எல்லாம் நெருப்பில் போட்டுக் கொளுத்தி விட்டாளாம். மஞ்சள் பூசிக் குளிப்பது முதல், புருஷனுக்குப் பாத பூஜை செய்வது வரையில் உள்ள சகலமான விஷயங்களையும், அவள் இப்போது உன்னுடைய அண்ணியிடம் கற்றுக்கொண்டு விட்டாளாம். நீ வரவில்லையே என்று ஏங்கி உயிரை விட்டுக் கொண்டு ஊணுறக்க மில்லாமல் துரும்பாய் இளைத்துப் போயிருக்கிறாள். இரவு பகல் உன் அண்ணி அவளுடன் கூடவே இருந்து காப்பாற்றி வருகிறாள். நீ வந்துவிட்டாய் என்ற சந்தோஷச் சங்கதியை முதலில் மனோன்மணியம்மாளுக்குத் தான் சொல்ல வேண்டும். முதலில் அவளுடைய வேலைக்காரியைக் கண்டு, சங்கதியைச் சொல்லி விட்டு பிறகு உங்கள் மனிதர் இருக்கும் இடத்திற்குப் போவோம்" என்றான். அதைக் கேட்ட கந்தசாமி, "அவளுடைய அறைக்குப் பக்கமாய் ஏதாவது வழி இருந்தால் அப்படியே அழைத்துக் கொண்டு போ. அவள் என்ன நிலைமையில் இருக்கிறாள் என்று நான் என் கண்ணால் பார்த்து, நீ சொல்லுகிறபடி அவள் உண்மையிலேயே மாறுபட்டிருக்கிறாளா என்பதைப் பார்க்கிறேன். ஆனால், நான் இப்போது அவளைப் பார்த்துவிட்டு வந்தேன் என்பது என் தகப்பனார் முதலிய எவருக்கும் தெரியக்கூடாது" என்றான். கோபாலசாமி அதற்கிணங்கி மனோன்மணியம்மாள் இருந்த விடுதிப் பக்கமாய்க் கந்தசாமியை அழைத்துச் சென்று, தான் துர நின்று கொண்டு, அவ்விடத்திலிருந்த ஜன்னல் கதவின் இடுக்கால் உட்புறத்தில் பார்க்கும்படி கந்தசாமியைத் தூண்ட அவன் அப்படியே செய்தான். அந்த ஜன்னலுக்குப் பக்கத்தில் உள்