பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 மாயா விநோதப் பரதேசி அப்போது வடிவாம்பாள் கன்றிற்குக் கனிந்திரங்கும் தாய்ப் பசுவைப் போல, கரை புரண்டு வழிந்த வாஞ்சையோடு மனோன் மணியம்மாளைத் தடவிக் கொடுத்து, "அம்மா நமக்கு எப்பேர்ப் பட்ட துன்பம் வந்தாலும், கடவுள் ஒருவரே கதியென்றும், அவர் எப்படியும் காப்பாற்ற வருவார் என்றும், நாம் ஒரே உறுதியாக நம்பியிருந்தால், நமக்கு எப்படியாவது வழி பிறக்குமென்று நான் இதற்கு முன் சொன்னதை நீ மறந்து விட்டாயா! சுவாமி நமக்குக் கொடுத்த வாக்கு பலிக்காமல் போகுமா? அன்றைய தினமே நல்ல குறி ஏற்பட்டு விட்டதே. இன்னம் நாம் அவநம்பிக்கைப் படலாமா? நான்கு தினங்களில் வருவார் என்று சுவாமி வாக்குக் கொடுத்திருப்பது ஒரு நாளும் பொய்க்காது. இன்னும் இந்த இரவு முழுதும் கழிந்த பிறகல்லவா நான்காவது நாள் கழிந்து போன மாதிரி. அதற்குள் எப்படியும் அவர் வந்துவிடுவார். இன்றிரவு கழிவதற்குள் நாம் எப்படியும் அவரைப் பார்க்கத்தான் போகிறோம். அந்த வாக்கு சாதாரணமான வாக்கல்ல. அதைப்பற்றி அவநம்பிக்கைப்படுவது பெருத்த அபசாரம்" என்றாள். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். ஆயினும், அவளது கண்ணி வழிந்தபடியே இருந்தது. பெருமூச்சுகள் வந்து கொண்டே இருந்தன. சிறிது நேரங்கழித்து அந்தப் பெண்மணி மறுபடியும் பேசத் தொடங்கி, "அக்கா! என்னவோ ஒருவித உணர்ச்சி என்னை வதைத்துக் கொண்டே இருக்கிறதே அக்கா! என் பிராணன் போய்விடும் போல இருக்கிறதே! கிட்ட வந்து என்னை அனைத்துக்கொள். ஐயோ! அவரிடம் நான் அன்றைய தினம் நடந்து கொண்ட மாதிரியைக் கண்டு அவர் என் மேல் முற்றிலும் அருவருப்பும் கோபமும் கொண்டிருப்பார் என்பது நிச்சயம். பட்டணத்திற்கு வந்தவர், என்னைப் பார்க்க இஷ்டப்படாமையால், இங்கே வராமல் ஒரு வேளை கோமளேசுவரன் பேட்டையிலேயே இருப்பாரோ! அக்கா மற்றவருக்குத் தெரியாமல் யாராவது ஒர் ஆளை அங்கே அனுப்பியாவது பார்த்துவரச் சொல்லக்கா? அவர் அங்கே இருந்தால், நான் செய்ததெல்லாம் தப்பிதம், தப்பிதமென்று நான் ஆயிரந்தரம் கன்னத்தில் அடித்துக் கொண்டு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும், இனி நான் அவருடைய