பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மாயா விநோதப் பரதேசி வைத்திருக்கும் அபாரமான செல்வமும், இனி தேடப் போகும் செல்வமும் உன்னைச் சேர்ந்தவை அல்லவா. அவ்வளவு செல்வத்திற்கும் உன்னை எஜமானியாக்கப் போகும் நான் உன்னைக் கேவலம் அடிமை நிலைமையில் கொண்டு போய் அமர்த்துவேன் என்று நினைத்தாயா? இந்த அற்ப விஷயத்தை அறிந்து கொள்ள மாட்டாத முடன் என்று நீ என்னை மதிக்கிறாயா? அப்படி நினைக்காதே. இதோ அந்த வடிவாம்பாள் இருக்கிறாளே, அவள் எப்பேர்ப்பட்ட பெரிய மனிதருடைய பெண் என்பது உனக்குத் தெரியுமா? அவளுடைய தகப்பனாருக்கு வருஷ வருமானம் மாத்திரம் ஒரு லட்சம் ரூபாய் வருகிறது. அவர்களுக்கு இவளைத் தவிர வேறே சந்ததியே இல்லை. எல்லாச் சொத்தும் இவளையே சேரப் போகிறது. அவர்களுடைய பெண் இந்த மன்னார் குடியார் வீட்டில் இருந்து வாழவில்லையா? அவளை அவர்கள் அவமரியாதையாக நடத்தினால், அந்தப் பெண் அவர்களுடைய வீட்டில் உள்ள மற்றவர்களிடத்தில் அவ்வளவு அந்தரங்கமான பிரியத்தோடு இருந்து வருவாளா? அவர்கள் தக்க பெரிய மனிதர்கள் அல்லவா, தங்களுடைய நாட்டுப் பெண்களை அடிமை போல நடத்தி அவமானப்படுத்துவார்களா? வெளிப்பார்வைக்கு அவர்கள் கர்னாடக மனிதர்கள் போல இருக்கிறார்களே அன்றி, குணத்தில் தங்கக் கம்பியல்லவா, மற்றவர்களிடம் அவர்கள் வைக்கும் பிரியத்தையும், காட்டும் மரியாதையையும், நீ கொஞ்ச நேரம் அவர்களோடு கூட இருந்து பழகினால், நீ அவர்களை தெய்வம் என்றே கொண்டாடுவாய். கிட்ட நெருங்கிப் பழகாமல், தூரப் பார்வையிலிருந்தே மனிதருடைய குணத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொள்வது தர்மமாகாது. நீ இது வரையில் இங்கிலீஷ் பாஷை கற்றதனால், குடி முழுகிப் போகாது. எந்த பாஷையானால் என்ன? எதிலும் நல்ல நடத்தையும், நல்ல விவேகமும், நல்ல குணமும் முக்கியமாக போதிக்கப்படுகின்றன. எதிலும் ஸாரத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு சக்கையை விலக்குவதே விவேகிகளுக்கு அழகு. வீணாக ஏன் நீ உன் மனசை வதைத்துக் கொள்ளுகிறாய்? மூடர்களாக இருந்தால் பயப்பட வேண்டியது தான். உன்னைப் போன்ற புத்திசாலிகள் அயலாருடைய மர்மத்தைக் கொஞ்சம்