பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 27 கவனிப்பாகப் பார்த்து அதற்குத் தகுந்தபடி நடப்பது ஒரு பெரிய காரியமா? உன்னை அவர்கள் அடிமை போல நடத்த மாட்டார்கள். நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே அம்மா' என்று நிரம்பவும் இதமாகக் கூறினார். அதைக் கேட்ட மனோன்மணியம்மாள் சிறிதும் ஆறுதலடையாத வளாய், "நீங்கள் பொதுப்படையாகப் பேசுகிறீர்கள். இவ்வளவு பெரிய தனவந்தராய் இருப்பவர்கள், இன்னொரு பெரிய மனிதர் வீட்டுப் பெண்ணை மரியாதையாகத் தான் நடத்துவார்கள் என்ற யூகமே தவிர, உண்மையில் அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களோ என்பது நெருங்கிய பழக்கத்தினால் தான் தெரியும். நான் அவர்களோடு அதிகமாய்ப் பழகினால், அவர்களிடம் இருக்கும் தவறுகளை எடுத்துச் சொல்வேன். இப்போது பழகாமை யால் அதிகமாய் எதையும் எடுத்துச் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம். அது போல அவர்கள் அபாரமான செல்வம் வாய்ந்த தனிகர்களாயிற்றே: அவர்கள் எல்லோரும் ஒர் இரவு முழுதும் மூன்றாவது வகுப்பு வண்டியில் ஆடு மாடுகள் அடைபடுவது போல அடைபட்டு வந்திருக்கிறார்களே. லோபிக் குணத்தினால்தானே அவர்கள் இப்படி வந்திருக்கிறார்கள். நானும் அவர்களோடு வந்திருந்தால், அதே வகுப்பில் தானே நானும் வரவேண்டும். என் ஆயிசு காலத்தில் நான் அப்படிப்பட்ட கஷ்டம் அடைந்ததுண்டா? அதை மாத்திரம் நீங்கள் சொல்லி விடுங்கள். நான் மற்ற விஷயங்களைப் பின்னால் கேட்டுக் கொள்ளுகிறேன்" என்றாள். அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை சந்தோஷத்தோடு புன்னகை செய்து, "அம்மா! அந்த விஷயத்தில் உன்னைப் போல நானும் அவர்களைப் பற்றி முதலில் தவறான அபிப்பிராயம் கொண்டேன். நடந்த விஷயத்தை அவர்கள் சொன்ன பிறகு உண்மை தெரிந்தது. அவர்கள் முதல் வகுப்பு டிக்கெட்டுகளே வாங்கிக் கொண்டு மாயவரம் வரையில் முதல் வகுப்பில் வந்தார்களாம். மாயவரத்தில் வந்து வண்டி மாறி மெயிலில் ஏறும்போது, முதலாவது வகுப்பிலும், இரண்டாவது வகுப்பிலும் இடமே இல்லையாம். மூன்றாவது வகுப்பில் மாத்திரம் இடம்