பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 28? உன்னைக் காப்பாற்றட்டும்" என்று தமக்குள்ளாகவே ஆசீர்வதித்தார். அது போல, மற்ற விருந்தினர், உறவினர், பட்டாபி ராம பிள்ளை ஆகிய எல்லோரும் மிகுந்த மன எழுச்சியும், ஆசைப் பெருக்கும், மன நெகிழ்வும், மயிர்சிலிர்ப்பும் அடைந்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கந்தசாமியைச் சூழ்ந்து கொண்டு அவரவருக்குத் தோன்றியபடி கேள்விகள் கேட்கலாயினர். "அப்பா கந்தசாமி வந்தாயா வா அப்பனே! என்போரும், "ஐயோ! உன்னைக் காணாமல் நாங்கள் எல்லோரும் பரிதவித்துக் கொண்டிருக்கிறோமே தம்பி!" என்போரும், "இத்தனை நாள் எங்கே போயிருந்தாய்?" என்போரும், "உன்னை எடுத்துப் போனது யார்?" என்போரும், "அவர்கள் உன்னை ஏதாவது உபத்திரவித்தார்களா?" என்போரும், "நீ ஏன் இத்தனை நாள் உன்னைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கவில்லை?" என்போரும், "கடைசியில் நீ எப்படித் தப்பி வந்தாய்?" என்போருமாய் ஒருவர் பின் ஒருவராயும், ஒரே காலத்திலும் கேள்விகள் கேட்ட வண்ணம் வந்து நெருங்கி பெருத்த கூக்குரல் புரியலாயினர். கால் நாழிகை காலம் வரையில் அந்த இடம் பெருத்த குழப்பமும், கூச்சலுமே மயமாக நிரம்பி இருந்தது. வேலைக்காரிகள் வேலைக்காரர்கள் ஆகிய எல்லோரும் மற்றவர்களைப் போலவே கட்டிலடங்கா ஆவலும் ஆசையும் கொண்டு, தங்கள் எஜமானரது மருமகப் பிள்ளை எப்படி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும் என்று ஓடோடியும் வந்து மூலை முடக்குகளினின்றும் தமது கழுத்து களை ஒட்டகம் போல நீட்டி நீட்டிக் கந்தசாமியைப் பார்க்க முயன்றனர். அப்போது வடிவாம்பாளும் வேலைக்காரியும், முற்றிலும் சோர்ந்து தளர்ந்து துரும்பு போல மெலிந்து, நடக்கவும் சக்தியற்றுத் தள்ளாடித் தவித்து அடிமேலடி வைத்து நடந்து வந்த மனோன் மணியம்மாள் கீழே விழுந்து விடாதபடி தாங்கிக் கொண்டு பூஜை மண்டபத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தனர். அவர்களுக் கெதிரில் தலை தெரிக்க ஓடிவந்த ஒரு வேலைக்காரி கந்தசாமி வந்து விட்டதாகவும், பூஜை மண்டபத்தில் இருப்பதாகவும் அவர்களிடம் கூறவே, அதைக் கேட்ட மூவரும் திடுக்கிட்டு ஆனந்தப் பெருக்கு என்ற ஒரு பலமான அலையினால் மோதப்