பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 283 ஏழை ஜனங்களுக்கும் வேஷ்டி, புடவைகள், போஜனம் முதலியவை வழங்க வேண்டும் என்றும் தீர்மானித்து அது போலவே பெருத்த பெருத்த ஏற்பாடுகள் செய்து, பழைய காலங் களில் தசரதர், தருமபுத்திரர் முதலிய மண்டலேசுவரர்கள் யாகங்கள் கலியானங்கள் நடத்திய காலத்தில் இப்படிப்பட்ட மகா அபாரமான ஏற்பாடுகள் தான் செய்யப்பட்டனவோ என்று எல்லோரும் பிரமித்துத் திகைத்து அதை என்றும் மறவாமல் புகழ்ந்து கொண்டே இருக்கத்தக்கபடி அந்தப் பூஜையை அன்றைய மாலையோடு சமாப்தி செய்தனர். அந்த ஒர் இரவு ஒரு பகலுக்குள் மனோன்மணியம்மாள் தாங்க இயலாத ஆனந்தப் பெருக்கினால் பூரித்துப் பெருத்துத் தனது இளைப்பும் களைப்பும் நீங்கப் பெற்றவளாய்ப் புது மேனியும் புது அழகும் அடைந்து பட்டை தீர்ந்த மாணிக்கக்கட்டி போல் ஜ்வலிக்கத் தொடங்கினாள். தன் ஆருயிர்க் காதலர் வந்து விட்டார்; தன் காதற்கலி தீர்க்க வந்த மதனவேள் வந்துவிட்டார்; தன் மனதைக் கொள்ளை கொண்ட உத்தமகுண வள்ளல் வந்து விட்டார் என்று அவள் தனக்குள்ளாகவே நினைத்து நினைத்துக் கந்தசாமியின் பெண் வடிவப் படத்தை நொடிக்கு நூறு தடவை பார்ப்பதும், அந்த ஆசையோடு தனது கண்களில் ஒற்றிக் கொள்வதுமாய் அதே பைத்தியமாகப் பிதற்றியபடி ஆனந்த மயமாக இருந்து வந்தாள். ஆனாலும், மற்றவருக்குத் தெரியாமல் தான் எப்படியாவது அவரை ஒரு தடவையாவது கண்டு களிக்க வேண்டும் என்ற பேராவல் அவளது மனத்தில் எழுந்து நிமிஷத் திற்கு நிமிஷம் தூண்டிக் கொண்டே இருந்ததானாலும், அந்த நற்குண மடந்தை அரும்பாடுபட்டு அந்த வேட்கையை அடக்கிய படியே இரவு பகல் இன்பக்கனவு கண்டவளாய் இருந்து வந்தாள். மறுநாள் மாலையில், பட்டாபிராம பிள்ளை, வேலாயுதம் பிள்ளை, சுந்தரம் பிள்ளை, கண்ணப்பா, கந்தசாமி முதலிய ஆண்மக்கள் அனைவரும் ஒரு பெருத்த கூடத்தில் ஆனந்தமாக உட்கார்ந்து பழைய சம்பவங்களைப் பற்றி வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தனர். திரிபுரசுந்தரியம்மாள் முதலிய பெண்பாலார் அனைவரும் பக்கத்து அறையில் உட்கார்ந்திருந்தபடி, புருஷர்கள் பேசியதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது அன்றைய