பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 மாயா விநோதப் பரதேசி மாலையில் வழக்கமாக வரும் சில சமாசாரப் பத்திரிகைகள் வந்தன. அவைகளை வாங்கிய பட்டாபிராம பிள்ளை, முக்கியமான ஒரு பத்திரிகையை எடுத்துப் பிரித்து அதன் பக்கங்களை அலட்சிய மாகத் தள்ளித் தலையங்கங்களைப் படித்துக் கொண்டே போக, அதில் முக்கியமான ஒரு சங்கதி இருந்ததைக் கண்டு வியப்புற்று, "இதில் ஒரு விசேஷ சங்கதி வந்திருக்கிறது. படிக்கிறேன் கேளுங்கள் என்றார். மற்ற எல்லோரும் வியப்போடு அதைக் கேட்கத் தலைப்பட்டனர். உடனே பட்டாபிராம பிள்ளை அடியில் வருமாறு எழுதப் பட்டிருந்த ஒரு செய்தியைப் படித்தார். சென்னை துரைத்தனத்தார் போன செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட கெஜட்டில் அடியில் காணப்படும் விஷயம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது:- - மன்னார்குடியில் இருந்து வந்த மகா புத்திமானும், பரோபகாரி யும், கெளரவப் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலுமான திகம்பர சாமியார் என்ற மகான் பாம்பு கடித்ததனால் இறந்து போய் விட்டதாக உணர்ந்து நிரம்பவும் விசனித்து, நமது மனப்பூர்த்தி யான அனுதாபத்தையும் துக்கத்தையும் மேற்படி யாருடைய குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். பொது ஜனங்கள் கேஷமப்பட வேண்டும் என்றும், தான் ஜென்மம் எடுத்தது பரோபகாரத்தின் பொருட்டே என்றும் கருதி, அவர் கடைசி வரையில் தமது உயிரைப் பொது ஜன நன்மைக்கே அர்ப்பணம் செய்தவர். அவர் மண்ணுலகைத் துறந்தது தமிழ் மக்களுக்கும் நமக்கும் என்றைக்கும் நிவர்த்தியாகாத பெருத்த நஷ்டம் என்றே கருதுகிறோம். அவரைப் போல சகலமான குணாதிசயங்களும் வாய்ந்த மேதாவிகள் யாரேனும் இருந்து நமக்கு மனுச்செய்து கொண்டால், மேற்படியார் வகித்து வந்த உத்தியோகத்தை நாம் தக்க யோக்கியதை உடையவருக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நற்சாட்சிப் பத்திரங்களுடன் நமக்கு நேரில் விண்ணப்பங்கள் அனுப்பிக் கொள்ளலாம். மிஸ்டர் வாட்ஸ் யூவர் நேம் சென்னை கவர்னர்.