பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 மாயா விநோதப் பரதேசி போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தாராம். அவர்களுடைய விசாரணை நேற்று இந்த ஊர் செஷன்ஸ் ஜட்ஜ் துரையின் முன்னர் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகளின் பக்கம் சென்னை மயிலாப்பூர் பாரிஸ்டர் சிவசிதம்பரம் பிள்ளை ஆஜராகி வெகு திறமையாக வாதித்தார். கைதி செய்யப்பட்டவர் சட்டைநாத பிள்ளையே அன்றென்று கடைசி வரையில் அவர் வாதித்துப் புகைப்படம், ரேகை முதலியவற்றின் சாட்சியங்களை எல்லாம் சின்னா பின்னமாக்கி விட்டார். கமாலுதீன் சாயப்பு என்று பெயர் வைத்துக் கொண்டிருந்த சட்டைநாத பிள்ளை தமக்கு இங்கிலிஷே தெரியாதென்று சொல்லி மறுத்துவிட்டார்; அதுவுமன்றி, வாதி கட்சிக்காரர், அவருடைய முகம்மதிய உடைகளை விலக்கி பட்டுக்கரை வேஷ்டி கட்டிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கும் அவர்கள் இணங்கவில்லை. ஜட்ஜ் துரை அவர்களை விடுதலை செய்யப் போன சமயத்தில் மேற்படி ஜானிஜான் கான் சாயப்பு ஒரு வேடிக்கையான தந்திரம் செய்து, கூரையிலிருந்து ஒரு பாம்புக் குட்டி சட்டைநாத பிள்ளையின் தலையில் விழுந்த விட்டதென்று ஆங்கிலத்தில் கூறினார். உடனே கமாலுதீன் சாயப்பு தமது குல்லாவையும் சட்டை நிஜார்களையும் விலக்கி எறிந்துவிட்டு உள்பக்கத்தில் அணிந்திருந்த பட்டுக்கரை வேஷ்டியோடு விளங்கினார். அதைக் கண்ட ஜட்ஜி துரை அவரே சட்டைநாத பிள்ளை என்று நிச்சயித்து, அவர் பதினான்கு வருஷ காலம் அந்தமானில் தண்டனை அனுபவிப்பதென்று தீர்மானித்தார். அவருடைய தம்பி மாசிலாமணி என்பவர் உடனே அந்த சாயப்புவுக்குப் பதினாயிரம் ரூபாயும், சர்க்காரில் ஐயாயிரம் ரூபாயும் சன்மானமளிக்க ஜட்ஜி உத்தரவு செய்தார். இது மாத்திரமல்ல. அன்றைய தினம் அவரைச் சேர்ந்த வேறு பலரும் பலவகையான குற்றங்கள் செய்ததாக விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டனர். அந்த விசாரணை நேற்று முழுதும் இழுத்து விட்டது. அதில் ஜட்ஜி துரை இன்று தீர்ப்புச் சொன்னார். சட்டைநாத பிள்ளையின் தம்பி மாசிலாமணி பலரைத் துண்டி அவரை விடுவிக்கச் செய்து ஒளிய வைத்திருந்த குற்றத்திற்காகவும், நாகப்பாம்புகளைப் பெட்டியில் வைத்தனுப்பி மன்னார்குடி திகம்பரசாமியாரைக் கொல்ல முயற்சித்த குற்றத்திற்காகவும், ஆள்களை அனுப்பி சென்னை கலெக்டர் பட்டாபிராம பிள்ளை