பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 287 அவர்களுடைய பங்களாவில் புகுந்து அங்கிருந்த அவரது பெண்ணை எடுத்துவர முயற்சித்த குற்றத்திற்காகவும், பிறகு மன்னார்குடி வேலாயுதம் பிள்ளை முதலியோரை மூளிப்படுத்த எத்தனித்த குற்றத்திற்காகவும் மொத்தத்தில் பதினான்கு வருஷம் அந்தமான் தீவில் தண்டனை அனுபவிப்பதென்றும், அவர்களு டைய அபாரமான சொத்து முழுதும் பறிமுதல் செய்யப்பட்டு சர்க்கார் கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஜட்ஜி தீர்ப்புச் சொன்னார். தாசி பத்மாசனியும், கலியப்பெருமாள் பிள்ளையும் ஜெயிலிலிருந்து ஓடிவந்த கைதி மறைந்திருக்க அனுகூலமாய் இருந்த குற்றத்திற்கு அவ்வாறு மாதம் கடினக்காவல் தண்டனை பெற்றனர். எண்ணெய்க்குடம் எடுத்து வந்த சட்டை நாத பிள்ளையை விடுத்த குற்றத்தைச் செய்த ரமாமணியம்மாள் இரண்டு வருஷக் கடினக்காவல் தண்டனையும், வேறு சில ஆட்கள் அவ்வாறு மாதக் கடினக்காவலும் பெற்றனர். சென்னையில் நடந்த இரண்டு சம்பவங்களிலும் துணைக் கருவியாய் இருந்த முரட்டு ஆள்கள் மும்மூன்று வருஷம் கடினக் காவல் தண்டனை அடைந்தனர். ஆனால், வேலாயுதம் பிள்ளை முதலியோரை மூளிப்படுத்தும் விஷயத்தில் உதவி செய்ய வந்த ரமாமணியம்மாள் தானே மூக்கறுபட்டுப் போனாள் ஆகையால், அந்த ஒரு குற்றம் சம்பந்தப்பட்ட வரையில், அவளுக்கு அந்தத் தண்டனையே போதுமான தென்று ஜட்ஜி துரை தீர்மானம் கூறினார். சாட்சி விசாரணையின் விரிவான செய்தி நாளைய தினம் வரும். - என்று வெளியிடப்பட்டிருந்த மகா ஆச்சரியகரமான செய்தியைப் படித்த பட்டாபிராம பிள்ளையும், மற்ற எல்லோரும் அப்படியே பிரமித்து, வியப்பும் திகைப்பும் அடைந்து, "ஆகா! என்ன ஆச்சரியம்! நமக்குத் தெரியாமல் எவ்வளவு விசாரணை நடந்திருக்கிறது! நம்மைக் கெடுக்க எத்தனை பேர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் ஆகா! சட்டைநாத பிள்ளை கடைசி வரையில் அவனுடைய வக்கிர புத்தியை விட்டானில்லையே! ஐயோ பாவம்! அவனுடைய தம்பி போன வருஷந்தானே சிறையில் இருந்து வெளியில் வந்தான். வந்தவன் ஒழுங்காக இருந்து இனியாவது நல்லவன் என்று பெயரெடுக்கக் கூடாதா! ஜெயிலி