பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 மாயா விநோதப் பரதேசி லிருந்த அண்ணனை விடுவிக்க முயன்று, அவனையும் கெடுத்து, தானும் அடியோடு கெட்டு, இன்னுமுள்ள வேறு பல மனிதரையும் கெடுத்தானே! சட்டைநாத பிள்ளையினுடைய சொத்தெல்லாம் இப்படியா அழிய வேண்டும்? ஆகா! இது காதால் கேட்பதற்கே சகியாத மகா துக்ககரமான செய்தியாக இருக்கிறதே! ஐயோ! பாவம்! கடவுளே! இன்றைய தினம் எங்கள் காதால் இந்த மகா சங்கடமான செய்தியை நாங்கள் கேட்க வேண்டுமா" என்று மிகுந்த இரக்கமும் உருக்கமும் தோன்றக் கூறினர். அந்தச் செய்தியைக் கேட்டதனால் அவர்கள் எல்லோரும் உற்சாகமும் சந்தோஷமும் அற்றவராய் அந்த இரவைக் கழித்தனர். மறுநாள் பட்டாபிராம பிள்ளை தமது பங்களாவிற்கு வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் ஒரு பெருத்த விருந்து தயாரித்தார். ஒரு பெருத்த மண்டலேசுவரனுக்குச் செய்யப்படும் விருந்து எவ்வளவு சிறப்பாகவும், விமரிசையாகவும், அபூர்வமாகவும் இருக்குமோ அம்மாதிரி மகா சிரேஷ்டமான விருந்து தயாரிக்கப்பட பட்டாபிராம பிள்ளை எல்லோருக்கும் ராஜோபசாரம் செய்து ஒடியோடி வணங்கி உவப்போடு உபசரித்து உண்பித்து அதைப் போன்ற விருந்தைத் தாம் அதுகாறும் உண்டதுமில்லை கண்டது மில்லை என்று எல்லோரும் அபாரமாக வியந்து கூறும்படி செய்து விட்டார். - எல்லோரும் விருந்துண்ட பின்னர் சந்தனம் பூசித் தாம்பூலந் தரித்த காலத்தில், வேலாயுதம் பிள்ளை பேசத் தொடங்கி, "என்னவோ கிரக பேதத்தால், நமக்கு ஏற்பட்ட தீமைகளெல்லாம் எம்பிரான் செயலால் சூரியன் முன் இருள் போல விலகியது. பையனுடைய ஜாதகத்தையும், பெண்ணினுடைய ஜாதகத்தை யும் நேற்று இரவு நான் பார்த்ததில், அவர்களுக்கு இனி சந்தோஷ காலம் ஆரம்பமென்பது தெரிந்தது. ஆகையால், நாம் கோரிய சுபகாரியத்தை இனி தாமதப் படுத்தாமல் நடத்திவிட வேண்டும். இன்று புதன்கிழமை அல்லவா. வருகிற வெள்ளிக்கிழமை அன்று நல்ல சுபமுகூர்த்த தினம் ஆதலால், அன்றைய தினம் நிச்சய தார்த்தம், கலியாணம் முதலிய சடங்குகளை எல்லாம் நடத்தி விடலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் கலியாணத்திற்கு ஆக வேண்டிய சகலமான ஏற்பாடுகளையும் செய்து மன்னார் குடியில்