பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 289 வைத்திருக்கிறோம். இப்போதே தந்தி கொடுத்து, இன்றைய ரயிலிலேயே எல்லாவற்றையும் போட்டு அவை நாளைய தினம் இங்கே வரும்படி செய்கிறேன். நம்முடைய சம்பந்திப் பிள்ளைக்கு இதனால் எவ்வித அசெளகரியமும் இல்லையானால், சுபகாரி யத்தை நடத்தி விடலாம்" என்றார். மற்ற எல்லோரும் அதை ஆமோதித்தனர். பட்டாபிராம பிள்ளை தாம் அதை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் அன்றைய தினமே கலியானத்தை நிறைவேற்றி விடுவதென்ற தீர்மானம் செய்யப்பட்டது. அதன் பிறகு வேலாயுதம் பிள்ளை, திரிபுரசுந்தரியம்மாள், கண்ணப்பா, பட்டாபிராம பிள்ளை ஆகிய நால்வரும் தனியாக இருந்து சம்பாவித்த காலத்தில் திரிபுரசுந்தரியம்மாள் பேசத் தொடங்கி, "கண்ணப்பா நாம் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு வந்த தினத்தன்று நீ கும்பகோணம் போய் அரசலாற்றுப் பாலத்தில் எழுதி விட்டு வந்த பிறகு நம்முடைய சுவாமியார் ஐயா எங்கே இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அவர்கள் அதற்கு என்ன பதில் எழுதினார்கள் என்பதும் தெரியவில்லையே. இந்தக் கலியாணம் நடக்கும் போது நம்முடைய சுவாமியார் ஐயா அவசியம் இருக்க வேண்டும். இந்தக் கலியானம் முக்கியமாக அவர்களாலேயே நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. ஆகையினால், அவர்களை விட்டு நாம் இதை நடத்துவது ஒழுங்கே அல்ல. இப்போது தான் அந்த விரோதிகள் சிறைச்சாலைக்குப் போய் விட்டார்கள். இனி சுவாமியார் ஐயா பயமின்றி வெளியில் வரலாம். ஆகையால், நீ இன்றைய தினம் இரவு ரயிலில் புறப்பட்டு கும்ப கோணம் போய் நாளைய பகல் முழுதும் இருந்து பாலத்தடியில் எழுதியாவது வேறு எப்படியாவது அவரைக் கண்டு அழைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் இங்கே வந்து சேர்; அன்று பகலில் தானே கலியாணம். அதற்குள் நீங்கள் வந்து விடலாம். அவர்கள் வராவிட்டால், நாம் இந்த முகூர்த்தத்தைத் தள்ளித்தான் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றாள். அதைக் கேட்டு மற்றவர்கள் அதற்கு இணங்கினார்கள். கண்ணப்பா அன்று இரவு 8-மணி மெயில் வண்டியில் போவதற்கு ஆயத்தமாக இருந்தான். மன்னார்குடியிலிருந்த சாமான்களை எல்லாம் அன்றைய தினமே ரயிலில் போட்டுக் கொண்டு வந்து சேரும்படி அவசரத் தந்தி ஒன்று உடனே மன்னார் tam.sol.ii.HH-19