பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 மாயா விநோதப் பரதேசி குடி நடராஜ பிள்ளைக்கு அனுப்பப்பட்டது. அவர் அப்படியே செய்வதாக உடனே மறு தந்தி கொடுத்தார். அன்றைய தினம் மாலையில் முதல் நாள் கூடியது போல பங்களாவில் இருந்த ஆண் பெண் பாலார் அனைவரும் கூடங்களில் உட்கார்ந்து சம்பாஷித்திருந்த தன்றி, தஞ்சையில் நடந்த விசாரணையின் விவரம் முழுதும் அன்றைக்கு வரும் என்று மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அதன்படியே பத்திரிகை கள் வந்தன. பட்டாபிராம பிள்ளை முதல் நாள் செய்தது போல ஒரு பத்திரிகையைப் பிரித்து ஆராய்ந்து பார்த்து, தஞ்சையில் நடந்த விசாரணையின் விவரம் முழுதும் விஸ்தாரமாக வெளியிடப் பட்டிருந்ததைக் கண்டு அதைப் படித்துக் கேட்ட எல்லோரும் ஆச்சரியமும் பிரமிப்பும் அடைந்தவராய்ப் பலவித அபிப்பிராயங் களை வெளியிட்டனர். போலீசார் பலவகையில் உழைத்து ஏராளமான சாட்சியங்களைச் சேகரித்து இடும்பன் சேர்வைகாரனை அப்ருவராகச் செய்து, ஜானிஜான் கான் சாயப்பு, நீலலோசனியம் மாள் முதலியோரின் உதவியால் அந்த வழக்கை வெகு திறமையாக நடத்தியதைப் பற்றி எல்லோரும் வெகுவாகப் புகழ்ந்தனர். அந்தச் சமயத்தில் பட்டாபிராம பிள்ளை பெரிதும் கூச்சலிட்டு, "ஆகா இதோ இன்னொரு விஷயம் இருக்கிறது. இதையும் படிக்கிறேன். கேளுங்கள்" என்று கூறிய வண்ணம் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்த செய்தியைப் படிக்கலானார்: ★ ★ 女 மேன்மை தங்கிய சென்னை கவர்னர் துரை அவர்களுக்கு மன்னார்குடி திகம்பரசாமியார் நிரம்பவும் வணக்கத்துடன் செய்து கொள்ளும் விண்ணப்பம்: சென்ற வார கெஜட்டில் தாங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தை நான் நேற்றைய தினம் பத்திரிகை மூலமாய்ப் படித்துத் தெரிந்து கொண்டேன். என்னுடைய பொதுஜன சேவையைப் பற்றித் தாங்கள் அபாரமாகப் புகழ்ந்திருப்பது பற்றி நான் எனது மனமார்ந்த நன்றி விசுவாசம் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆனால் நான் இறந்து போய் விட்டதைப் பற்றி தாங்கள் விசனிப்பதையும், என் குடும்பத்தாருக்கு அனுதாபம்