பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29? தெரிவிப்பதையும் இன்னொரு சந்தர்ப்பத்திற்கு ஒத்திவைத்துக் கொள்ளுமாறு வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், பாம்புகளை அனுப்பி என் உயிரைக் கொண்டு போக எண்ணிய பெரிய எமனை முடிவில் அந்தப் பாம்பே ஜானிஜான் கான் சாயப்புவின் வாயிலிருந்து வந்து கொன்று விட்டது. அவனும் அவனைச் சேர்ந்த எமபடர்களும் என்னை விட்டுத் தங்கள் சொந்த உலகத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். நான் மறுபடி ஜென்மம் எடுத்து வந்து இன்று முதல் என் உத்தியோகத்தை வகித்துக் கொண்டேன். நான் பாம்பினால் இறந்த பிறகும், இப்போது மறு ஜென்மம் எடுத்ததற்கு முன்னாலும் உள்ள இடைக்காலம் எனக்கு ஒரு கிரகண காலம் என்றே நான் நினைக்கிறேன். மற்ற காலங்களில் செய்வதைவிட, கிரகண காலங்களில் மந்திரம் ஜெபித்தால், அது நன்றாய்ப் பலிக்கும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அது போல என்னுடைய கிரகண காலத்தில் நான் செய்த ஜெபம் கைமேல் பலித்து விட்டது. அதன் விவரம் இன்னதென்பதை வெளியிடுவது ஒரு வகையில் என் மனதிற்குப் பிடிக்கவில்லை ஆயினும் அதை நான் வெளியிடாமல் இருப்பது அவ்வளவு உசிதமாகத் தோன்ற வில்லை. உலகத்தோருக் கெல்லாம் உதவி செய்வதாக அபாரமாக எல்லோராலும் புகழுப்படுகிற திகம்பரசாமியார் தனது ஆப்த மித்ரர்களை அவர்களது அபாய காலத்தில் கைவிட்டு, தனது உயிரையே பிரதானமாக மதித்து சுயநலம் கருதி எதிரிகளுக்குப் பயந்து எவ்விடத்திலோ பத்திரமாக ஒளிந்திருந்து விட்டு, அபாய மெல்லாம் நீங்கியவுடன் தனது பதவியை வகிப்பதற்கு வெட்க மில்லாமல் வந்துவிட்டான் என்று பொது ஜனங்கள் நினைத்து என்னைத் தூற்றுவார்கள். அப்படித் தூற்றுவதில், நான் எதைப் பற்றிக் கவலைப்படுகிறேன் என்றால், இனி நான் பொது ஜன. சேவை செய்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் என்னை வெறுத்து விலக்குவார்கள் என்பதைப் பற்றியே நான் முக்கியமாகக் கவலை கொள்கிறேன். அதுவுமன்றி, நீங்களும், இன்னும் என்னுடைய ஆப்த மித்ரர்களும் என்னைப் பற்றி வெளிப்படை யாக எவ்வித அருவருப்பையும் வெளியிட மாட்டீர்களாயினும் மனதிற்குள்ளாவது என்னைப் பற்றி மதிப்புக் குறைவாக எண்ண நேரும் என்றும் என் மனம் சொல்லுகிறது. ஆகவே, நான் வெளி