பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 மாயா விநோதப் பரதேசி யிடப் போவது, என் ஆப்த மித்திரர்களுடைய குடும்ப சம்பந்த மான விஷயங்களாக இருந்தாலும், அவைகளை நான் வெளியிடு வதைப் பற்றி என்னை மன்னிக்குமாறு பன்முறையும் வேண்டிக் கொள்ளுகிறேன். இந்த இருபது தினங்களும் நான் உண்மையிலேயே இறந்து போனவன் போலவும், அந்தக் காலத்தில் நான் செய்தவைகள் ಹಣTaj போலவுமே இப்போது எனக்குத் தோன்றுவதால், அந்தக் கனவில் நான் எடுத்த புதிய புதிய ஜென்மங்களில் செய்த வேலைகளை எனக்கு நினைவிருக்கும் வரையில் தெரிவிக்கிறேன். நமது மாசிலாமணி ஒரு வருஷ காலம் தண்டனை அடைந்து விடுபட்டு வந்த பிறகு அவன் நம்மை மறந்திருப்பான் என்று நான் நினைக்கவே இல்லை. அவன் யாரையாவது சேர்த்துக் கொண்டு எனக்கும் என் ஆப்த நண்பர்களுக்கும். ஏதேனும் கெடுதல் செய்ய நினைப்பான் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன். ஆனால், அவன் சட்டைநாத பிள்ளையை விடுவிக்க எத்தனிப்பான் என்று நான் நினைக்கவேயில்லை. அவன் யாரோடு சிநேகம் வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும், எவ்விதமான சதியாலோசனை கள் செய்கிறான் என்பதையும் அறிவதற்கு நானும் போலிஸ் ஜெவான் வேஷந்தரித்து மற்ற ஜெவான்களோடு அப்போதைக் கப்போது அவனுடைய வீட்டிற்குப் போய் அவனோடு பேசி விட்டு வந்திருக்கிறேன். போலீஸ் இலாகாவில் ஹெட்கான்ஸ்டே பில் வேலையிலிருந்து நீக்கப்பட்டவனான இடும்பன் சேர்வை காரனோடு மாசிலாமணி சிநேகம் வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதும், அவன் பக்கத்து வீட்டுக்காரனிடம் பழக்கம் செய்து கொண்டு அந்தப் பக்கமாய் ஏணி வைத்து ஏறி ஜன்னல் திறப்பால் நுழைந்து உள்ளே வந்து அடிக்கடி மாசிலாமணியோடு பேசி விட்டுப் போகிறான் என்பதும் எனக்குத் தெரியும். அவன் மாசிலா மணியுடன் சிநேகமாய் இருப்பது மற்றவருக்குத் தெரியக்கூடா தென்று அப்படிச் செய்கிறான் என்றும், அவர்கள் ஏதோ சதியாலோசனை செய்கிறார்கள் என்றும் நான் நிச்சயித்துக் கொண்டேன். ஆனாலும், அவர்கள் எதைப்பற்றி சதியாலோசனை செய்து வருகிறார்கள் என்பதை நான் அறியக்கூடவில்லை. அதுவு மன்றி, அவன் எதிர்த்த வீட்டிலிருந்த ரமாமணியம்மாளைத் தன்