பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 மாயா விநோதப் பரதேசி இருந்தேன். அன்று மாலையில் நான் கிழவியிடம் பேசியதில், ரமாமணியம்மாளின் குடும்பத்தார், அவளுடைய போயி, இடும்பன் சேர்வைகாரன் ஆகியவர்களை மாசிலாமணி அவசரமாக சென்னப்பட்டணத்திற்கு அன்றைய இரவு வண்டியில் அனுப்புகி றான் என்று நான் தெரிந்து கொண்டேன். வெள்ளிக்கிழமை நடக்கப் போகும் சுபகாரியத்திற்கு முன் ஏதாவது கெடுதல் விளைவிக்க வேண்டும் என்றே மாசிலாமணி அவர்களை அனுப்புகிறான் என்று என் மனம் சந்தேகித்தது. அவர்களைத் தொடர்ந்து போனால், அவர்களது கருத்தை அறிந்து கொள்வ தோடு, கந்தசாமி காணாமல் போன விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்றும், கூடுமானால் நிச்சயதார்த்தத்திற்கும் வரலாம் என்றும், நினைத்து நானும், அவர்களோடு பட்டணம் வரத் தீர்மானித்து, நீர்மேல்குமிழி நீலலோசனியம்மாளாக மாறினேன். நீர்மேல்குமிழி என்ற ஊர் திருவரங்கத்தை அடுத்து இருப்பதாக நான் முன்னர் சொன்னது நினைவிருக்கலாம். திருவரங்கம் என்பது கடவுளின் நாடகமேடை அல்லவா. கடவுளின் நாடக மேடையாகிய இந்த உலகில், நீர்மேல்குமிழி போன்ற இந்த உடம்பே என் ஆத்மாவின் இப்போதைய இருப்பிடம் அல்லவா. ஆகையால், நான் பொய் சொன்னதிலும் மெய்யையே சொன்னேன். கும்பகோணத்திலேயே அவர்க ளோடு நான் ஏறினால், அவர்கள் சந்தேகங் கொள்வார்கள் என்று நினைத்து, ரயில்வே கார்டுக்கு பத்து ரூபாய் கொடுத்து, அவருடைய வண்டியிலேயே உட்கார்ந்து சிதம்பரம் வரையில் வந்தேன். அவ்விடத்தில், என்னை அவர், நான் காட்டும் இரண்டாவது வகுப்பு வண்டியில் ஏற்றிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன் ஆகையால், அவர் அதற்கிணங்க, என்னை ரமாமணியம்மாள் முதலியோர் இருந்த வண்டியில் ஏற்றி விட்டார். அவ்விடத்திலேயே ரமாமணியம்மாளின் ஆசை நாயகன் இன்னான் என்பதைக் கண்டு கொண்டேன். அவன் கும்பேசுவரன் கோவிலில் தவில் அடிப்பவன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவன் ரமாமணியம்மாளுடைய ஆசை நாயகன் என்பதைக் காண, எனக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது. ஆனாலும், அதை அடக்கிக் கொண்டு நான் அவர்களோடு அன்னி யோன்னியமாகப் பேசிக்கொண்டே போனேன். அவர்கள் பணப்