பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 295 பேய் பிடித்த துராத்மாக்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் ஆதலால், எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் இருப்பதாகவும், நான் அவர்களுடன் கும்பகோணத்தில் இருக்க விரும்புவதாகவும் சொல்லி அவர்களுடைய ஆசைப் பேயைக் கிளப்பி விட்டேன். அந்தப் பேய் நன்றாகப் பிடித்துக் கொண்டது. அவர்கள் தலை விரித்து ஆடத் தொடங்கினார்கள். அவர்களோடு கூடவே இருந்து எப்படியாவது உண்மையைக் கிரகிக்கத் தீர்மானித்துக் கொண்டேன். வண்டி எழும்பூரில் வந்து நின்றது. நாங்கள் இருந்த வண்டிக்கெதிரில் கலெக்டர் பட்டாபிராம பிள்ளையும் அவருடைய புதல்வியும் நின்று கொண்டிருந்தார்கள். அதே வண்டியில் மன்னார்குடியிலிருந்து வேலாயுதம் பிள்ளை முதலி யோர் வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களைப் பார்க்க கலெக்டர் வந்திருப்பதாக உடனே உணர்ந்து கொண்டேன். ஆனால், அந்த மடந்தை வெள்ளை உடை தரித்து வந்திருந்தது என் மனதிற்குப் பிடிக்கவில்லை; அந்தக் கோலத்தில் அந்தக் குழந்தை தனது மாமனார் மாமியாரைப் பார்ப்பது எனக்கு அவ்வளவு உசிதமாகப் படவில்லை. ஏனென்றால், நானே அந்தப் பெண்ணை ஏற்பாடு செய்தவன் ஆகையால், துஷனைக்கு நானே பாத்திரம் ஆக வேண்டும் என்ற நினைவுண்டான தாகையால், நான் உடனே கீழே இறங்கினேன். ரமாமணியம்மாள் முதலியோர் இடும்பன் சேர்வைகாரன் கொணர்ந்த சாமான்களை இறக்குவதைக் கவனித்திருந்தார்கள் ஆதலால், நான் ஒரே நொடியில் மனோன்மணியம்மாளிடம் போய் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டுத் திரும்பி வந்து விட்டேன். நான் அப்போது சொன்ன வார்த்தைகள் உடனே பலன் தந்து விட்டன என்பதை நான் பின்னால் அறிந்து கொண்டு, என் சமயோசிதமான திறமையைப் பற்றி என்னை நானே புகழ்ந்து கொண்டேன். பிறகு அவர்களோடு நான் சர் சவலை ராமசாமி முதலியார் சத்திரத்திற்கு வந்து, அவர்களோடு நிரம்பவும் அன்னியோன்னியமாய்ப் பழகிக் கொண்டு, அடிக்கடி கோவில்களுக்கும் சுவாமி தரிசனத்திற்கும் சமுத்திர ஸ்நானத்திற்கும் போவதாய்ப் பாசாங்கு செய்து கொண்டு வந்தேன். ஏனென்றால், நான் எப்போதும் அவர்களோடு கூடவே இருந்து காட்டிவிட்டால், பிறகு ஏதாவது அவசர சமயத்தில் நான் அவர்களை விட்டுப் போக நேரும் போது காரணம் சொல்ல