பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 - மாயா விநோதப் பரதேசி வேண்டி வரும் என்று அவ்வாறு செய்து வந்தேன். அவர்களோடு நான் பழகியதில் பக்கிரியா பிள்ளையே அசடனென்பதையும், எளிதில் ஏமாறக்கூடியவன் என்பதையும் கண்டு அவனை அழைத்துக் கொண்டு திருவொற்றியூர் போய்; அவ்விடத்தில் அவனுக்கு வைர மோதிரம் சன்மானித்து, இடும்பன் சேர்வைகாரன் இன்ன கருத்தோடு வந்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டேன். வெள்ளிக்கிழமை அன்று இடும்பன் சேர்வைகாரன் இல்லாமல் போகும்படி செய்ய உத்தேசித்து அவனை எப்படியாவது போலீசாரைக் கொண்டு கைது செய்து விட நினைத்து, முதல் நாள் இரவில் அவனுக்கு நானே சாப்பாடு பரிமாறினேன். என்னுடைய கை மோதிரத்தைக் குழம்பில் கலந்து அவனுடைய சாதத்தில் வார்த்து விட்டேன். அவன் பெரிய பெரிய கவளமாய் விழுங்கும் முரட்டு மனிதன் ஆகையால், அவனுடைய தொண்டையில் மோதிரம் சிக்கிக்கொள்ளாது என்று நான் நினைத்தேன். தவறி, சிக்கிக் கொண்டாலும், பரிமாறும் போது, மோதிரம் எனக்குத் தெரியாமல் வழுக்கிக் குழம்பில் தவறி விழுந்து விட்டதாகச் சொல்லி அதை வாங்கிக் கொண்டு, பிறகு வேறே ஏதாவது தந்திரத்தினால் அவனைக் கைது செய்ய நினைத்தேன். மோதிரத் தந்திரமே பலித்துவிட்டது. அன்றைய இரவில் நான் கூக்குரல் செய்து மோதிரத்தை யாரோ அபகரித்துக் கொண்டதாகச் சொல்ல, போலீசார் வருவிக்கப்பட்டனர். அவர்கள் மூட்டை முடிச்சுகளை எல்லாம் சோதனை செய்த காலத்தில், நான் அது விழுங்கப்பட்டிருந்தாலும் இருக்கும் ஆதலால், அது போனால் போகிறதென்று அலட்சியமாகப் பேசி, எல்லோருடைய வயிற்றை யும் அவர்கள் சோதனை செய்யும்படி தூண்டி, இடும்பன் சேர்வை காரனைச் சிறைப்படுத்தினேன். நான் இன்னது செய்கிறேன் இன்ன இடத்திற்குப் போகிறேன் என்பதை வேலாயுதம் பிள்ளை முதலியோருக்குக் கூடத் தெரிவிக்கக் கூடாதென்பது என்னுடைய கருத்து. ஏனென்றால், ஒருவருக்குத் தெரிவதே ரகசியமன்றி, இருவருக்குத் தெரிந்தால், அது எப்படியும் பகிரங்கத்திற்கு வந்து விடும் என்பது என் கொள்கை ஆகையால், நான் நேரில் வேலாயுதம் பிள்ளையிடமாவது பட்டாபிராம பிள்ளையிடமாவது போய், அவர்களுடைய சதியாலோசனையை வெளியிட விரும்ப வில்லை. ஆகையால், சப் ஜெயிலிலிருந்து ஒரு ஜெவான்