பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 297 சொன்னது போல, அந்த விவரத்தைப் பட்டாபிராம பிள்ளைக்கு ஏதோ ஒரு டெலிபோனிலிருந்து தெரிவித்தேன். ஆனாலும், அவ்வளவோடு நான் நிற்கவில்லை. பட்டாபிராம பிள்ளை ஜெவான்களைக் கொணர்ந்து காவல் போட்டுக் கொண்டு பந்தோ பஸ்தாக இருக்கிறாரா என்பதையும், வேலாயுதம் பிள்ளை முதலி யோர் கோமளேசுவரன் பேட்டையிலிருந்து பட்டாபிராம பிள்ளையின் வீட்டிற்கு வருகிறார்களா என்பதையும் கவனித்துக் கொண்டு எச்சரிக்கையாக இருந்தேன். அன்றைய தினம் இரவில் நான் போலீசாரிடம் போய் சில முரட்டு மனிதர்கள் கோமளேசுவரன் பேட்டைக் கலியான வீட்டில் நுழைந்து திருட உத்தேசித்து இருப்பதாகக் கூறி, போலீசாரை எச்சரித்து நானும் கூட இருந்தேன். ரமாமணியம்மாள் முதலியோர் இரவில் கோமளேசுவரன் பேட்டை கலியான வீட்டுக்குள் நுழைந்ததை நான் கவனித்தேன். அதற்கு மேல் என்ன நடக்கிறதென்று நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால், அவர்களுடைய ஆள்கள் குடிவெறியால் அவர்களையே மூளிப்படுத்துவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. பிறகு ஆள்கள் வந்து அவர்களை மூளிப்படுத்தி விட்டு ஓடிவந்த போது போலீசார் அவர்களைப் பிடித்துக் கொண்டனர். ரமாமணியம்மாள் முதலி யோருக்கு தெய்வச் செயலாக நேர்ந்த பொல்லாங்கைப் பற்றி நான் நிரம்பவும் விசனமுற்றேன் ஆயினும், நான் சந்தேகித்து கும்பகோ ணத்திலிருந்து அவர்களோடு வந்ததனால், வேலாயுதம் பிள்ளை முதலியோருக்கு நேர இருந்த பெருத்த அபாயம் விலகியதென்ற விஷயம் அளவற்ற சந்தோஷத்தை உண்டாக்கியது. அன்றைக்கு மறுநாள் நான் கோமளேசுவரன் பேட்டைக்குப் போய், அவ்விடத் திலிருந்த வேலைக்காரியைக் கண்டு பேசி, நான் பட்டாபிராம பிள்ளையின் உறவினள் என்று கூறி, கந்தசாமி இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். அவ்விடத்தில் அவனுடைய புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. கந்தசாமியைக் கண்டு பிடிப்பதற்கு அது உபயோகப்படும் என்று நினைத்து, கலியாணப் பெண் தன் புருஷனுடைய படத்தைப் பார்க்க ஆசைப்படுகிற தென்று வேலைக்காரியிடம் சொல்லி அந்தப் படத்தை வாங்கிக் கொண்டேன். கண்ணப்பா கும்பகோணம் அரசலாற்றுப் பாலத்தடியில் எழுதிய விவரத்தில், சென்னை ஆஸ்பத்திரியில்