பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 மாயா விநோதப் பரதேசி ஸ்மரணையற்றுப் படுத்திருந்தவன், அவனுடன் கூட இருந்து படித்து வந்த கோபாலசாமி என்று எழுதி இருந்தான் ஆதலால், அவனைக் கொண்டே, அந்த ரகசியத்தை அறிய வேண்டும் என்று நான் தீர்மானித்துக் கொண்டு, மிஸ்டர் வெல்டன் துரையாக வேஷம் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரியின் இரண்டாவது டாக்டரிடம் பழக்கம் செய்து கொண்டு, கோபாலசாமியைப் பல കൂLഞഖ பார்த்தேன். ുഖങ്ങങ്ങ தெளிவிக்க அவர்கள் பட்டயாடுக ளெல்லாம் வீணாய்ப் போகவே, அவன் ஒரு வேளை பாசாங்கு பண்ணுகிறானோ என்ற சந்தேகம் உதித்தது. அவன் மாசிலா மணிக்கு வேண்டியவனா, அல்லது, கந்தசாமிக்கு வேண்டியவனா என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற யோசனையும் தோன்றியது. நான் மற்றவர்களுடன் போய், அவனுடைய கண்ணில் மூக்குப் பொடியைப் போட்டுப் பார்த்தேன். கண்ணி நன்றாக வந்தது. ஆகவே, அவன் பாசாங்கு செய்கிறான் என்று நிச்சயித்துக் கொண்டேன். மாசிலாமணி வந்திருப்பதாகச் சொல்லிப் பார்த்தேன். அதற்கும் அவன் அசையவில்லை. ஆகவே, அவன் மாசிலாமணிக்கு வேண்டியவனல்ல என்று நிச்சயித்துக் கொண்டு அவனைக் குழியில் போட்டுப் புதைக்கப் போவதாகச் சொல்லிப் பார்த்தேன். அதற்கும் அவன் அசையவில்லை. அவன் கந்தசாமிக்கு வேண்டியவன் என்பது தெரிந்த தாகையால், கந்தசாமி இறந்து போய் விட்டான் என்றால் அப்போதாவது விழித்துக் கொள்ள மாட்டானா என்று நினைத்து அப்படிச் சொல்ல, அந்த மருந்து உடனே பலித்தது. அதன் பிறகு அவனிடம் சகலமான உண்மைகளையும் நான் கிரகித்துக் கொண்டதோடு, கந்தசாமி எவ்விதமான புடவை, ரவிக்கை, நகைகள் அணிந்திருந்தான் என்பதை விவரமாகக் கேட்டறிந்து கொண்டேன். பிறகு போலீஸ் கமிஷனர் என்னைப் பட்டாபிராம பிள்ளை வீட்டிற்கு அழைத்து வந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மறுநாள் நான் எனக்குத் தெரிந்த ஒரு சித்திரக்காரனிடம் போய், கந்தசாமியின் புகைப் படத்தைக் கொடுத்து, கோபாலசாமி சொன்னபடி அதன் தலைக்கு டோப்பா, நகைகள், புடவை, ரவிக்கை முதலியவற்றைப் போட்டு எழுதச் செய்து, அதை வைத்து மறுபடி போட்டோ எடுக்கச் செய்ததில், அது தத்ரூபம் கந்தசாமி பெண் வேஷம் போட்டுக் கொண்டு வந்தது போல இருந்தது. அதை நான் என் மடிசஞ்சியில்