பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 299 பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன். கந்தசாமியைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற கவலையில் நான் இரவு பகல் துங்க வில்லை. கோபாலசாமி சொன்ன விவரத்தைக் கேட்ட பிறகு மாசிலாமணி ஆள்களை அனுப்பி மனோன்மணியம்மாளை அபகரித்து வர முயற்சித்து, அன்றைய தினம் தற்செயலாய் அங்கே பெண் வேஷத்தில் போன கந்தசாமியைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்று நான் உடனே நிச்சயித்துக் கொண்டேன். மிஸ்டர் வெல்டன் துரை வேஷத்தில் நான் இருந்த காலத்தில் போலீஸ் கமிஷனரைத் தூண்டி, அவர் உடனே கும்பகோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாவையங்காருக்கு ஒரு தந்தி கொடுக்கச் செய்து, உடனே மாசிலாமணியின் வீட்டைச் சோதனை போடச் செய்தேன். அவர் அப்படியே செய்து, அந்த வீட்டில் அவனையும் அவனுடைய ஆள்களையும் தவிர வேறே யாரும் இல்லை என்று தெரிவித்து விட்டார். என் கவலையும் திகிலும் அதிகரித்து விட்டன. கந்தசாமியை அவர்கள் ஒரு வேளை கொன்று விட்டார்களோ, அல்லது, வேறே எங்கேயாவது பந்தோபஸ்தாக வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் உதித்தது. அதை அவர்களைக் கொண்டே நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் தீர்மானித்துக் கொண்டேன். அவர்கள் சாதாரணமாக ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் ஆகையால், கரடகன் தமனகன் வேலை செய்து ஒருவரை ஒருவர் குடுமி முடிந்து விட்டாலன்றி உண்மை வெளியாகாதென்று நினைத்தேன். கந்தசாமியின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பதை நான் முதல் காரியமாக மதித்தேன். அதோடு சட்டைநாத பிள்ளையின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதையும், அவர்கள் எல்லோரும் செய்த சதியாலோசனைகளை வெளிப்படுத்து வதையும் இரண்டாவதாக வைத்துக் கொண்டு, நீலலோசனி யம்மாளாய் மாறி ஆஸ்பத்திரிக்குப் போய், பத்திரம் எழுதி ரிஜிஸ்டர் செய்து கொண்டதன்றி, மாசிலாமணிக்கு ரமாமணியம் மாளைக் கொண்டு ஒரு கடிதமும் எழுதிப் பெற்றுக் கொண்டேன். அந்தக் கடிதம் பின்னால் உபயோகப்படும் என்று, அது கடலில் விழுந்து விட்டதாகச் சொல்லி மறுபடி அதே மாதிரி இன்னொரு கடிதம் எழுதிக் கொடுக்கச் செய்து அதையும் வாங்கி வைத்துக் கொண்டேன். பிறகு ஜானிஜான் கான் சாயப்புவாக மாறி போலீஸ்