பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 மாயா விநோதப் பரதேசி கமிஷனரிடம் போய், நான் திகம்பரசாமியாரின் கீழ் வேலை செய்த துப்பறியும் உத்தியோகஸ்தன் என்று சொல்லி திகம்பரசாமியார் . கொடுத்தது போல நான் எழுதி வைத்துக் கொண்டிருந்த ஒரு நற்சாட்சிப் பத்திரத்தை அவருக்குக் காட்டினேன். இடும்பன் சேர்வைகாரன் பல குற்றங்களைச் செய்திருப்பதால், அவனிடம் நான் சில உண்மைகளைக் கிரகிக்க வேண்டும் என்றும், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எனக்கு உதவியாய் இருக்க உத்தரவு செய்யு மாறும் கேட்டுக் கொண்டேன். திகம்பரசாமியாருடைய கையெழுத்தை அவர் பார்த்து, என் வார்த்தையை நம்பி, எனக்கு உதவி செய்யும்படி போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு கொடுத்தார். நான் அவருடைய உதவியைக் கொண்டு, இடும்பன் சேர்வைகாரன் இருந்த சிறைச்சாலையில் ஒரு கைதி போல இருந்து தந்திரம் செய்து, அவனிடம் கடிதம் எழுதி வாங்கினேன். அந்தக் கடிதத்தில் இருந்த எழுத்தைப் போல நான் வேறொரு கடிதத்தில் எழுதி அன்றைய தினமே மாசிலாமணிக்கு தபால் மூலமாய் ஒரு கடிதம் அனுப்பினேன். கடிதத்தோடு வருகிறவன் போலீஸ்காரன் என்றும், பணம் கொடுக்க வேண்டாம் என்றும் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது முன்னரே தெரிந்த விஷயம். அதுவுமன்றி, கந்தசாமியே பெண் வேஷந் தரித்து வந்திருந்தவன் என்பதைக் கேட்டவுடனே இடும்பன் சேர்வைகாரன் ஆச்சரியமடைந்து, அதை மாசிலாமணிக்குத் தெரிவித்ததைக் கொண்டு, கந்தசாமி அவர்களுடைய வசத்திலேயே எங்கேயோ இருப்பதாகவும், அவனுக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்ற கருத்தோடு அந்த விஷயத்தை மாசிலாமணிக்குச் சேர்வைகாரன் எழுதுகிறான் என்றும் நான் யூகித்துக் கொண்டு, அன்றே கும்பகோணம் போய் நீலலோசனியாய் மாறி போலீஸ் அண்ணாவையங்காரிடம் போய், சென்னை கமிஷனரிடம் சொன்னது போலப் பொய் சொல்லி, நான் திகம்பரசாமியாரின் கீழ் வேலை செய்த துப்பறிபவன் என்று ஒரு நற்சாட்சிப் பத்திரத்தைக் காட்டி, அவர் ஒரு ஜெவானைக் கடிதத்தோடு மாசிலாமணிக்கு அனுப்பும்படி செய்தேன். அவன் திரும்பி வந்து மாசிலாமணி சொன்னதை எல்லாம் என்னிடம் சொல்லி அவன் கொடுத்த கடிதத்தையும் என்னிடம் கொடுத்தான். நான் உடனே நீலலோசனியாக மாசிலாமணியிடம் போய், ரமாமணியம்மாளின் கடிதத்தைக் கொடுத்து, அவனோடு சம்பாவித்து முடிவில், ரிஜிஸ்டர் செய்த பத்திரத்தைக் காட்டி a.