பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 301 அவனுக்கு அவள் பேரில் அருவருப்பும் பகைமையும் கோபமும் உண்டாகும்படி செய்தேன். அவனைத் துண்டி ரமாமணிக்கே கடிதம் எழுதும்படி செய்தால், அவன் சந்தேகம் கொள்வான்; அதோடு அவன் அவளை நேருக்கு நேர் துஷித்து எழுதவும் மாட்டான் என்று நினைத்து, வக்கீலுக்குக் கடிதம் எழுதித் தரச் செய்து அதை வாங்கிக் கொண்டு வந்தேன். அப்போது கந்தசாமியைப் பற்றிய பிரஸ்தாபம் வந்த காலத்தில் அவன், "ஆகா மோசம் போனேனே!" என்று சொன்னதைக் கொண்டு, கந்த சாமிக்கு அவன் அதுவரையில் யாதொரு கெடுதலும் செய்ய வில்லை என்றும், கந்தசாமி தப்பித்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்றும் நிச்சயித்துக் கொண்டேன். அவன் தன்னுடைய வீட்டை எனக்குக் காட்டிய போது, சில அறைகள் மூடிவைக்கப்பட்டிருந்தன. கந்தசாமி அவற்றிற்குள் இருக்க மாட்டான் என்ற எண்ணம் உண்டானதானலும், நான் உடனே அண்ணான பயங்காரிடம் போய் ஜெவான்களை அனுப்பி அன்றைய மாலையில் ஒரு தரம் மாசிலாமணியின் வீடு முழுதையும் சோதனை போடச் செய்ததன்றி, நான் கையில் வைத்திருந்த கந்தசாமியின் பெண் வேஷப் படத்தை மாசிலா மணியின் வேலைக்காரர் வேலைக்காரிகளுக்குக் காட்டச் செய்து, அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல் ஏதாவது தெரியுமா என்று கேட்கச் செய்ததில், அவர்கள் தங்களுக்கு ஒரு செய்தியும் தெரியா தென்று சொல்லிவிட்டார்கள். ஆகையால், நான் அன்றைய தினமே பட்டணம் திரும்பி வந்து, மறுநாள் காலையில், மறுபடியும் மிஸ்டர் வெல்டன்துரையாக மாறி ஆஸ்பத்திரி பெரிய டாக்டரைக் கண்டு, ரமாமணியம்மாள் முதலியோர் பெரிய குற்றவாளிகள் என்று போலீஸ் கமிஷனர் சொன்னதாகவும், அவர்களுடைய வாக்குமூலத்தைத் தந்திரமாக கிரகிக்க வேண்டும் என்றும் சொல்லி, ஒரு கிராமபோன் யந்திரம் வாடகைக்கு வாங்கி, அதை வைத்துவிட்டுப் போய், நீலலோசனியம்மாளாக வந்து, ரமாமணியம்மாளை அழைத்து வந்து, மாசிலாமணி தனது வக்கீலுக்கு எழுதிய கடிதத்தைக் காட்டி அவள் கோபாவேசம் கொள்ளும்படி செய்தேன். அந்தக் கடிதத்தை நான் அதற்கு முன்னரே பிரித்துப் பார்த்திருந்தேன் ஆதலால், அதைப் படித்த வுடன் அவள் கோபங் கொண்டு பிதற்றுவது நிச்சயம் என்று தோன்றியதாகையால், அதை அப்படியே பிடிக்க கிராமபோன்