பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 மாயா விநோதப் பரதேசி யந்திரம் வைத்தேன். அங்கிருந்தபடியே டெலிபோன் மூலமாய் சப் இன்ஸ்பெக்டருடனே பேசி, இடும்பன் சேர்வைகாரனை வரவழைத்து வைக்கும்படி செய்து விட்டு நான் மறுபடி ஜானி ஜான் கானாக மாறி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் இடும்பன் சேர்வைகாரனுடன் பேசி, அவன் மாசிலாமணியின் மீது கோபமும் பகைமையும் கொள்ளும்படி செய்து, அவனை அப்ருவராக எடுத்துக் கொள்வதாகவும், அவன் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்றும் எழுத்து மூலமாய் ஏற்பாடு செய்து கொண்டோம். பிறகு, நானும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும் அவனை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்தோம். அவன் அப்ரூவர் ஆதலால், அவன் சட்டைநாத பிள்ளையைக் காட்டிக் கொடுத்தால், அவனுக்குப் பரிசு கிடைக்காதென்றும், மாசிலாமணி கச்சேரியில் தன் கையினாலேயே பரிசு கொடுக்கும் பெருமை அவனுக்கு இல்லாமல் போய்விடும் என்றும் நினைத்தேன். ஆகையால், நானே சட்டைநாத பிள்ளையின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்தவன் என்று சொல்ல ஏற்பாடு செய்து கொண்டேன். அவ்வாறு மாசிலாமணியை அவமானப்படுத்தி, அவனது திமிரை அடக்க வேண்டும் என்பது என் அவா, சர்க்கார், ஐயாயிரம் ரூபாய் வெகுமதி கொடுப்பதாக வெளியிட்டால் அவன் தன் தமயன் இருக்கும் இடத்தைக் காட்டுவோருக்குப் பதினாயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்வதன் அர்த்தம், "எவராலும் அவர் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியாது. நான் பதினாயிரம் ரூபாய் பந்தயம் கட்டுகிறேன்" என்று ஆகிறதல்லவா. அந்தத் திமிரை அடக்குவது அவசியமான விஷயம் என்று நினைத்தேன். ஆகவே, மறுநாளாகிய வெள்ளிக்கிழமை நாங்கள் சட்டைநாத பிள்ளையை யும், அவனோடு இருந்தவர்களையும் மாசிலாமணியையும் கைது செய்தோம். ஆனால், மாசிலாமணியைக் கைது செய்யும் முன், இடும்பன் சேர்வைகாரனை அனுப்பி, கந்தசாமி எங்கே இருக்கிறான் என்பதை விசாரிக்கும்படி செய்தேன். செவ்வாய்க் கிழமை இரவிலேயே அவன் பெண் வேஷத்தோடு தப்பித்துக் கொண்டு போய்விட்டதாகத் தெரிந்தது. நான் சென்னையிலிருந்து வரும் போது, போலீஸ் கமிஷனரைத் தூண்டி கவர்னரிடம் அனுப்பி, சட்டைநாத பிள்ளை முதலியோரின் வழக்கை திங்கட் கிழமை அன்று தஞ்சாவூர் ஜில்லா ஜட்ஜ் துரையே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு வாங்கிவரச் செய்திருந்தேன்