பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 - மாயா விநோதப் பரதேசி மறுபடி தோன்றுவதுமாக இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை. டாக்டர் அவனது நிலைமையை சோதித்துப் பார்த்து விட்டு, அவன் ஞாயிற்றுக்கிழமைக்குள் சரியான நிலைமைக்கு வந்து விடுவான் என்று உறுயாகச் சொன்னார். அவனைப் பற்றிய கவலை நீங்கியது ஆனாலும் சென்னையில் அவனைக் காணாது உயிரை விட்டுக் கொண்டிருப்போருக்கு நல்ல செய்தி சொல்லி அவர்களைத் தைரியப்படுத்த எண்ணி நான் அன்றைய தினமே பட்டணத்திற்குப் புறப்பட்டேன். அவன் தெளிவடைந்தவுடன், திங்கட்கிழமை ரயிலில் அவனை சென்னைக்கு அனுப்பி வைக்கும்படி டாக்டரிடம் ஏற்பாடு செய்துவிட்டு, நான் அதில் சம்பந்தப்பட்ட தாகக் கந்தசாமியிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு மறுநாள் காலையில் பட்டணம் வந்து, மறுபடி நீலலோசனியாக மாறினேன். ஆனால், அந்தச் சமயம் நீலலோசனியை சுமங்கலியாக மாற்றினேன். அவளுக்கு சிவப்புப் புடவையும், தாலியும், குங்குமப் பொட்டும், கொடுத்தேன். பட்டாபிராம பிள்ளையின் பங்களவில் புகுந்தேன்; வேலைக்காரிகளோடு தந்திரமாகப் பேசி மனோன்மணியம்மாள் கந்தசாமி காணாது போனது பற்றி நோய் கொண்டு பட்டினி கிடந்து துரும்பாய் மெலிந்து போய் நிரம்பவும் துர்லபமான நிலைமையில் இருப்பதாகவும், அவளுடைய பிராணன் இனி அதிக நாள் நில்லாதென்றும் கேள்வியுற்றேன். அவளைத் தேற்றும் பொருட்டும், அவள் சந்தோஷமடையும் பொருட்டும் நான் உடனே ஒரு காரியம் செய்தேன். என்னிட மிருந்த கந்தசாமியின் பெண் வேஷப் படம் அதற்கு மேல் எனக்கு உபயோகம் இல்லாமல் என் மடிசஞ்சிக்குள் துங்கிக் கொண்டிருந் தது ஆகையால், அது மனோன்மணியம்மாளிடம் போய் அவளை சந்தோஷப்படுத்தி அவள் இறக்காமல் தடுப்பதான பெரிய காரியம் செய்யப் பயன்படும் என்று நினைத்ததன்றி, அதை உடனே அவள் பேருக்கு விலாசம் எழுதி தபாலில் அனுப்பி விட்டேன். அம்மாதிரி நான் கந்தசாமியின் பெயரை உபயோகித் தது, அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெருத்த உத்தேசத்தோடு செய்ததாகையால் கந்தசாமி என்னை அவசியம் மன்னிப்பான் என்று நம்புகிறேன். அதன் பிறகு நான் அந்தக் கும்பலில் புகுந்து, புடவை தானம் வாங்கிக் கொண்டேன்; மன்னார்குடியில் நான் இறந்த பிறகு அன்றைய தினந்தான் திருப்தி கரமாக போஜனம் செய்தேன். நான் சாதாரணமாக வந்து, கந்தசாமி