பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ులs இன்ன இடத்தில் இருக்கிறான் என்றால், எல்லோரும் பதறி அடித்துக் கொண்டு புறப்பட்டு ஆலங்குடிக்கு ஒடுவார்கள் என்றும், கந்தசாமி நிம்மதியாய் இருந்து குணமடைவது கெட்டுப் போகும் என்றும் நினைத்து, நான் ஆவேசம் கொண்டவள் போல நடித்து, இன்ன இடத்தில் அவன் இருக்கிறான் என்பது தெரியாதபடி விஷயத்தைத் தெரிவித்து, அவர்கள் சந்தோஷமாய் இருக்கும்படி செய்தேன். நான் வேறே ஏதாவது வேஷத்தோடு ஆவேசம் கொண்டிருந்தால், அது நம்பிக்கைப் படாதென்று நினைத்து சுமங்கலி வேஷம் போட்டுக் கொண்டேன். ஏனென்றால், அவ்வளவு பெரிய மனிதரான வேலாயுதம் பிள்ளையை ஒரு பெண் பிள்ளை துணிந்து, "அடே வேலாயுதம்" என்று கூப்பிடு வதைக் கண்டு, அதை அவரும் மற்றவர்களும் கடவுளின் வாக்கென்றே நம்புவார்கள் என்று நினைத்து அப்படிச் செய்தேன். பலருடைய மனவேதனையை நிவர்த்தி செய்வதான பெருத்த நன்மையைக் கருதி நான் கடவுளின் சக்தியை வகித்துக் கொள்ளத் துணிந்ததையும், வேலாயுதம் பிள்ளை அவர்களை மரியாதைக் குறைவாக அழைத்ததையும் எல்லோரும் மன்னிக்க வேண்டு கிறேன்; அந்த ஆவேசம் கொண்ட ஸ்திரீ சொன்னதை உண்மை என்று எல்லோரும் நம்பி இருப்பதற்கு அனுகூலமாக, நான் சொன்னது நிஜமென்று அவர்கள் உடனே எண்ணிக் கொள்ளட்டு மென்று, அன்று காலையில் நான் மனோன்மணியம்மாளுக்கு அனுப்பிய படம் அன்றைய மாலைக்குள் அவளிடம் வந்து சேரும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அன்றைய தினமே நல்ல செய்தி வரப்போகிறதென்று அவர்களுக்குச் சொல்லி வந்தேன். மனதில் துர்நினைவும் துராசையும் இன்றி, பிறரது நன்மை ஒன்றையே கருதி மனிதர் பொய் சொல்வதும், குற்றமான செய்கைகளைச் செய்வதும் மன்னிக்கத் தகுந்தவைகள் என்பது நம் முன்னோரின் கொள்கை ஆதலால், நான் அதே கொள்கைப்படி நடந்து கொண்டேன். நான் புத்திக் குறைவினால் தவறுகள் செய்திருந்தாலும், அவைகளை நண்பர் அனைவரும் கூடிமிக்கு மாறு பன்முறை வேண்டிக் கொள்கிறேன். சனிக்கிழமை இரவே நான் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூருக்குப் போய் திங்கட் கிழமை நடக்க இருந்த விசாரணைக்கு ஆக வேண்டிய காரியங் களைக் கவனித்து, ஜானிஜான் கான் சாயப்புவாகவும், நீலலோசனி மா.வி.ப.#1-20