பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 மாயா விநோதப் பரதேசி யம்மாளாகவும் கச்சேரியில் வந்து நான் எடுத்துக் கொண்ட காரியங்கள் பூர்த்தியடையும்படி செய்து விட்டேன். நான் மிஸ்டர் வெல்டன் துரையாக மாறி ஆஸ்பத்திரிக்குப் போன காலத்தில் ரமாமணியம்மாள் முதலியோரைக் கண்டு அவர்களுக்கு ரப்பர் மூக்கு முதலியவை செய்து கொடுப்பதாக வாக்குக் கொடுத்தேன். அது ஒன்று தான் பாக்கி இருக்கிறது. அவர்கள் பிறருக்குத் தீங்கு நினைத்து அதைத் தாங்களே அனுபவிக்க நேர்ந்தாலும், அதைப் பற்றி நான் நிரம்பவும் வருந்தி அவர்களுக்கு அந்த உதவியை யாவது செய்ய எண்ணி கல்கத்தாவில் உள்ள ஒரு நிபுணருக்கு எழுதி ஏற்பாடு செய்திருக்கிறேன். அவை சீக்கிரம் வந்து சேரும். அது நிற்க, திருவாளன் கந்தசாமி செவ்வாய்க்கிழமை தினம் சென் னைக்கு வந்து தனது மனிதர்களிடம் சேர்ந்து, எல்லோர் மனதும் சந்தோஷம் அடையச் செய்திருப்பான். வெள்ளிக்கிழமை அன்று காலையில் நான் சென்னைக்கு வந்து எனது இஷ்ட தெய்வங்க ளாகிய வேலாயுதம் பிள்ளை, சுந்தரம் பிள்ளை, சிவக்கொழுந்தம் மாள், திரிபுரசுந்தரியம்மாள், வடிவாம்பாள், கண்ணப்பா முதலி யோரை தரிசனம் செய்து கொள்ள எண்ணி இருக்கிறேன். அப்போது கவர்னர் துரை அவர்களையும் நேரில் வந்து பார்க்க உத்தேசிக்கிறேன். அப்போது மற்ற விவரங்களையும் நேரில் பேசிக்கொள்கிறேன். இங்ங்னம் பொதுஜன ஊழியன், திகம்பர சாமியார். என்று எழுதப்பட்டிருந்த விரிவான செய்தியைப் படித்த பட்டாபிராம பிள்ளையும் மற்ற எல்லோரும் உடனே மயிர்சிலிர்க் கப் பெற்றுப் பரவசமடைந்து, "ஆகாகாகாகா என்று வியப்புக் கூச்சலிட்டு மூக்கின் மேல் விரலை வைத்துப் பெரு முழக்கம் செய்தனர். வேலாயுதம் பிள்ளை தாங்கமாட்டாத மனவெழுச்சியும் ஆனந்தப் பெருக்குமடைந்து, "ஐயோ! என்னப்பனே! ஆகாகாகா! உம்மை ஈசுவரனுடைய அவதாரம் என்றே சொல்ல வேண்டு மப்பா. முன்பு என் பெரிய மருமகள் விஷயமாக அந்தத் துஷ்டர் களால், என் குடும்பத்துக்கு ஏற்பட்ட எத்தனையோ பெரிய இடர்களை நீக்கி, எங்கள் குடும்ப விளக்கை நிலை நிறுத்திய காருண்ய வள்ளலாகிய நீரே இப்போதும் பேசுந் தெய்வமாய் வந்து இந்த உலகத்தில் வேறு எவராலும் சாதிக்க இயலாத