பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ଝc7 - இத்தனை அரிய பெரிய அற்புத சாமர்த்தியச் செய்கைகளைச் செய்து மறுபடியும் நாங்கள் உஜ்ஜீவிக்கும்படி செய்ய முன் வந்தீரா ஆகா! நானும் என் சந்ததியாரும் எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து, உமக்குத் தினம் தினம் பாதபூஜை செய்து பிரதக்ஷண நமஸ்காரம் செய்தாலும், நாங்கள் உம்மிடம் பட்ட கடன் தீரவே தீராது. மகா திர புருஷன்! எந்த உத்தமியின் மணி வயிறு பெற்றெடுத்த அவதார புருஷரோ! எங்களைக் காப்பாற்று வதற் கென்றே வந்து ஜெனித்த மகானே! நீர் இருக்கும் திக்கு நோக்கி அநந்த கோடி தண்டன் சமர்ப்பிக்கிறேன்" என்று நிரம்பவும் நெகிழ்ந்து தழுதழுத்த குரலில் கூறி திகம்பரசாமியார் இருந்த திக்கு நோக்கி சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணக்கமாக நமஸ்கரித்து எழுந்தார். திரிபுரசுந்தரியம்மாள், கண்ணப்பா, கந்தசாமி ஆகிய மூவரும் ஆனந்தமயமாய் நிரம்பிப் போய்த் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் பேசமாட்டாதவராய்த் தொண்டை அடைத்துப் போய் சித்திரப் பதுமைகள் போல நின்றனர். விருந்தினர் அனைவரும் ஆனந்த நிர்த்தனம் செய்து ஆர்ப்பரித்து, திகம்பர சாமியார் செய்த ஒவ்வொரு சாமர்த்தியச் செய்கையையும் சொல்லிச் சொல்லிக் களிவெறி கொண்டு பெருத்த கோஷம் செய்தனர். பட்டாபிராம பிள்ளை தமது கையில் இருந்த பத்திரிகையை உடனே மனோன்மணியம்மாளுக்குக் கொடுத் தனுப்ப, அவளும் அவளோடிருந்த வடிவாம்பாளும் அந்த மகா அதிசயமான வரலாற்றைப் படித்து வாய் பேசா ஊமைகளாய் மாறி ஆனந்த வெள்ளத்தில் மிதந்தனர். திகம்பர சாமியார் வெளியிட்ட அற்புதமான வரலாற்றை இந்த உலகத்தோர் அனைவரும் படித்து வியப்புற்று ஆனந்தம் எய்தி அவரைப் புகழ்ந்தனர். சிறைச்சாலை யில் இருந்த சட்டைநாத பிள்ளை, மாசிலாமணி, ரமாமணியம்மாள் முதலியோரும் அதைப் படித்து, "ஆகா! இந்தப் படுபாவியா எங்களை ஏமாற்றினவன்!" என்று கூறி வியப்பே வடிவாக மாறினர். பட்டாபிராம பிள்ளையின் பங்களா தத்ரூபம் சுவர்க்க லோகம் போலவே காணப்பட்டது. அங்கிருந்தோர் அனைவரும், பசி, தூக்கம், விசனம், கவலை முதலிய எவ்வித தேக பாதையும் மனோபாதையுமின்றி நிச்சலனமான பேரின்ப சாகரத்தில் ஆழ்ந்து மிதந்திருந்தனர் என்று சொல்வதைக் குன்றக் கூறியதாகக் கருத வேண்டும்.