பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 மாயா விநோதப் பரதேசி மறுநாள் பொழுது விடிந்தது. அன்றைக்குள் சகலமான கலியான ஏற்பாடுகளையும் தாங்கள் செய்து விட வேண்டும் என்று எல்லோரும் வெகு சுறுசுறுப்பாகத் தத்தம் வேலைகளைச் செய்யத் துவக்கி, அன்றைய தினம் இரவு கழிவதற்குள் அந்த பங்களாவை இந்திர விமானம் போல அலங்கரித்து பெருத்த மண்டலாதிபதியின் பட்டாபிஷேகத்திற்குச் செய்யத்தக்க ஏற்பாடு களை எல்லாம் செய்து விட்டனர். மன்னார்குடியிலிருந்து சகலமான சாமக்கிரியைகளும் அம்பாரம் அம்பாரமாக வந்து குவிந்து விட்டன. அன்றிரவு முதலே மேளங்களும், பாண்டு வாத்தியங்களும் ஜாம் ஜாமென்று முழங்கத் தலைப்பட்டு விட்டன. - கலியான தினமும் வந்து சேர்ந்தது. திகம்பர சாமியார் வரப் போகிறார் என்ற செய்தி சென்னை முழுதும் பரவிப் போகவே, லட்சக்கணிக்கில் ஜனங்கள் அதிகாலையிலே வந்து நிறைந்து ரயில் ஸ்டேஷன் முதல் பட்டாபிராம பிள்ளையின் பங்களா வரையில் கூடி நெருங்கி விட்டனர். பத்திரிகையில் வெளியான சங்கதிகளைப் படித்த சென்னை கவர்னர், போலீஸ் கமிஷனர், பெரிய டாக்டர் துரை முதலியோரும், இன்னும் மற்றுமுள்ள பெரிய உத்தியோகஸ் தர்களும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்து மிகுந்த ஆவலோடு அந்த மகானது வருகையை எதிர்பார்த்திருந்தனர். வேலாயுதம் பிள்ளை முதலிய பிரமுகர்கள் மேள வாத்தியம், பாண்டு வாத்தியம், பூர்ண கும்பம் முதலியவற்றோடு தோன்றி சாக்ஷாத் ஈசுவரனையே தரிசிக்க நிற்பவரைப் போலக் கைகட்டி அங்கங்களை ஒடுக்கிக் கொண்டு நின்றனர். ரயிலும் காலத்தில் வந்து சேர்ந்தது. திகம்பர சாமியார் முதல் வகுப்பில் வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து முதல் வகுப்பு வண்டிகளில் தேடினர். அவர் காணப்படவில்லை. இரண்டாவது வகுப்பு வண்டிகளிலும் காணப்படவில்லை. அவர் வரவில்லை என்று எல்லோரும் நினைத்து ஏமாற்றமடைந்து ஏங்கி நின்ற தருணத்தில் மூன்றாவது வகுப்பு வண்டியிலிருந்து இறங்கி ஜனக் கும்பலைக் கண்டு ஒதுங்கி ஒரு மூலையாகப் போய்க் கொண்டிருந்தவர்களும், காஷாய வஸ்திரம் அணிந்தவர்களுமான ஒரு பரதேசியையும், அவரது மனைவியையும் கண்ட யாரோ சிலர், "சாமியார் அதோ போகிறார் போலிருக்கிறதே!" என்றனர். அதைக் கேட்ட வேலாயுதம் பிள்ளை முதலியோர் ஓடோடியும் சென்று, "சுவாமி!