பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 30C) ஆண்டவனே! எங்களைப் காப்பாற்றிய உயிர்த் தெய்வமே! உங்களைப் பார்ப்பதற்கு பக்த கோடிகளாகிய நாங்கள் எல்லோரும் இங்கே காத்திருக்கிறோமே. எங்களைப் பாராது போவது தருமமா" என்று கூறி சாஷ்டாங்கமாக சாமியாருக்கு முன்னால் விழுந்து கும்பிட்டு எழுந்தார். அவரைப் போல அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் செய்தனர். அதைக் கண்ட மற்ற ஜனங்களில் பெரும்பாலோரும் தம்மை மறந்து அப்படியே செய்தனர். சிலர் சாமியாருக்குப் பூமாலை சாத்தினர். சிலர் பூர்ண கும்பம் வழங்கினர். சிலர் பாதபூஜை செய்தனர். அப்போது சென்னை கவர்னரும் கமிஷனரும் தோன்றி, தாங்கள் இன்னார் என்று கூறி அவருக்குத் தமது மரியாதையைச் செலுத்தி அவரது தெய்விகமான சாமர்த்தியத்தை அபாரமாகப் புகழ்ந்து அவரை வாழ்த்தினர். அத்தனை ஜனங்களும் வருவார்கள் என்று சுவாமியார் எதிர்பார்த் தவரல்லர் ஆதலால் அவர் அப்படியே ஸ்தம்பித்து மெய்ம்மறந்து போய் ஒவ்வொருவருக்கும் தக்கபடி உபசார வார்த்தை கூறினார். உடனே எல்லோரும் சுவாமியாரையும், அவரது மனைவியாரை யும் மேள வாத்தியங்கள் முழங்க அழைத்துக் கொண்டு வெளியில் சென்று நூற்றுக் கணக்கில் ஜதை ஜதையாக நிறுத்தப் பட்டிருந்த மோட்டார் வண்டிகளில் ஒன்றில் அவர்களை உட்காரச் செய்து தாங்களும் அமர்ந்து ஊர்வலம் போலப் புறப்பட்டு கலெக்டரது பங்களாவை அடைந்தனர். அவ்விடத்தில் வடிவாம்பாள் முதலிய ஸ்திரீ ரத்னங்கள் மஞ்சள் நீர் ஆரத்தியோடு ஆயத்தமாக நின்று சுவாமியாருக்கு திருஷ்டி தோஷம் கழித்து மங்களகீதம் பாடி அவர்களை வரவேற்றனர். எல்லோரும் பங்களாவில் அமைக்கப் பட்டிருந்த கலியாண மண்டபத்திற்குச் சென்று ஆசனங்களில் அமர்ந்தனர். வேலாயுதம் பிள்ளையும் பட்டாபிராம பிள்ளையும் அன்றைய தினம் தாம் கலியாணம் நடத்த உத்தேசித்திருந்த செய்தியைத் திகம்பர சாமியாரிடம் கூறி அவரது அனுமதியைப் பெற்று அதற்குரிய சடங்குகளைத் தொடங்க ஆரம்பித்தனர். அன்றைய பகலில் திருவளர் செல்வன் கந்தசாமிக்கும், திருநிறைச் செல்வி மனோன்மணியம்மாளுக்கும் திருக்கல்யாணம் வெகு-விமரிசை யாக நிறைவேறியது. லட்சக்கணக்கில் ஜனங்கள் விஜயம் செய்து ஆசி கூறி விருந்துண்டனர். அது கர்ண மகாராஜனது கலியாணமே