பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 மாயா விநோதப் பரதேசி என்று எல்லோரும் வெகு காலம் வரையில் புகழும்படி ஏராளமான தான தருமங்கள் வழங்கப்பட்டன. கலியானத்திற்கு மறுதின மாகிய சனிக்கிழமை அன்று கங்கணவிசர்ஜனம் முதலிய சடங்குகள் நிரம்பவும் அமோகமாய் நடைபெற்றன. மறுதினமாகிய ஞாயிற்றுக்கிழமை இரவில் புதிய தம்பதிகளுக்கு சாந்தி முகூர்த்தம் நடத்துவதென்று எல்லோரும் தீர்மானித்து அதன் பொருட்டு லட்சக்கணக்கில் பொருட் செலவு செய்து பள்ளியறை ஜோடித்து மன்மதன், தேவேந்திரன் முதலியோர் கூட அத்தகைய சயனமாளி கையை அதுகாறும் கண்டிரார்கள் என்று எல்லோரும் வியந்து புகழத்தக்கபடி அமைத்து, அதில் பக்ஷண பலகாரங்கள் முதலிய உபகரணங்கள் யாவற்றையும் பூர்த்தியாக நிரப்பினர். வைதிகச் சடங்குகள் போஜனம் முதலியவை நடந்தேறிய பின்னர் மனோன் மணியம்மாள் சர்வாபரண பூவிதையாய் ஜெகஜ் ஜோதியாய் அலங்கரிக்கப்பட்டு அந்த சயனக் கிரகத்திற்குள் அனுப்பப்பட்டி ருந்தாள். அவளுக்குப் பின்னர் சரியான சுப காலத்தில் மணமகனும் தத்ரூபம் மன்மதன் போன்ற அலங்காரத்தோடு உள்ளே அனுப்பப் பட்டான். அதற்கு முன் தனக்கும் மனோன்மணியம்மாளுக்கும் நேர்ந்த சந்திப்பின் ஞாபகம் கந்தசாமியின் மனதில் மாறாமல் இருந்தது ஆகையால், தன்னிடம் அவள் அன்று எவ்வாறு நடந்து கொள்வாளோ என்று மிகுந்த கவலையும் கலக்கமும் கொண்டவ னாய் அந்த யெளவன வடிவழகன் தயங்கித் தயங்கி உள்ளே சென்று தனக்காக அமைக்கப்பட்டிருந்த முத்துக் கட்டிலிற்கு சமீபமாய்ப் போய்ச் சேர்ந்து தனது கடைக்கண் பார்வையை நாற் புறங்களிலும் செலுத்தித் தனது நாயகி என்ன நிலைமையில் இருக்கிறாள் என்று ஆராய்ந்து பார்த்தான். உடனே மனோன் மணியம்மாள், ஒரு வெள்ளித் தட்டில் ஏராளமான ரோஜாப் புஷ்பங்களையும் இன்னும் பூஜைக்குரிய சாமான்களையும் கரத்தில் ஏந்திய வண்ணம் நாணிக் குனிந்து அன்ன நடை நடந்து அவனுக்கெதிரில் வந்து, அவனது காலடியில் அவைகளை வைத்து, அவனுக்குப் பாதபூஜை செய்து, ரோஜா மலர்களால் அவனது பாதங்களை அர்ச்சித்து, அவனைச் சுற்றிப் பன்முறை பிரதக்ஷணம் செய்து அவனுக்கு முன்னால் மண்டியிட்டு நமஸ்காரம் செய்து, கன்னங்களில் அடித்துக் கொண்டு கைகுவித்துக் குனிந்து நிற்க, அதைக் கண்ட மணமகன் முற்றிலும் பிரமித்து வியப்பும் திகைப்பும் அடைந்து பேரானந்த நிலையில்