பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29 கச்சேரிக்குப் போக வேண்டும்" என்று கூறிய பின், அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டார். அவ்வாறு புறப்பட்டவர் முதல் நாளில் செய்தது போல போலிஸ் கமிஷனருடன் ஆஸ்பத்திரியை அடைந்து கோபாலசாமியைப் பார்த்து அவனது நிலைமையைப் பற்றி டாக்டர்களிடம் விசாரிக்க, அவர்கள் சந்தோஷகரமான செய்தி எதையும் கூறவில்லை. முதல் நாளில் இருந்ததைவிட, அவனது நிலைமை கேவலப்பட்டிருந்ததாகவும், அவன் பிழைப்பது துர்லபம் என்றும் கூறினர். அந்தத் தகவலைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை மிகுந்த கவலையும் கலக்கமும் கொண்டவராய்ப் போலீஸ் கமிஷனரோடு சிறிது நேரம் சம்பாஷணை புரிந்திருந்த பின்னர் அவரை அனுப்பிவிட்டு வேலாயுதம் பிள்ளையின் மாளிகையை அடைந்து கோபாலசாமியின் நிலைமையைத் தெரிவித்ததன்றி, அவர்களது யோக கூேடிமங்களை விசாரித்த வண்ணம் அவ்விடத்தில் ஒரு நாழிகை காலம் வரையில் அவர்களோடு சம்பாஷணை புரிந்து கொண்டிருந்தார். கந்தசாமி எங்கே இருக்கிறான் என்பதைப் பற்றி எவ்விதமான தகவலும் தெரியாமல் இருந்ததானாலும், கோபாலசாமி பிழைக்க மாட்டான் என்ற செய்தியைக் கேட்டதனாலும், வேலாயுதம் பிள்ளையும் மற்றவர்களும் தாங்க ஒண்ணாத விசனமும் கவலையும் கலக்கமும் அடைந்து தளர்ந்து உட்கார்ந்து போய் விட்டனர் ஆதலால், பட்டாபிராம பிள்ளை அவர்களுக்குப் பலவகையில் ஆறுதல் கூறிய பின் அவ்விடத்தை விட்டுத் திரும்பித் தமது பங்களாவிற்கு வந்து, தமது ஸ்நானம் போஜனம் முதலியவற்றை முடித்துக் கொண்டு வழக்கப்படி தமது கச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தார். அன்று மாலையிலும், மறுநாளாகிய வெள்ளிக்கிழமை காலையிலும், அவர் வைத்திய சாலைக்குப் போய் கோபாலசாமியின் நிலைமையைப் பற்றி மிகுந்த கவலையோடு விசாரிப்பதும், போலீஸ் கமிஷனரிடம் போய் அவருக்கு வந்திருக்கும் தகவல்களைத் தெரிந்து கொண்டு, அவருக்குப் பற்பல யோசனைகளைச் சொல்லுவதும், வேலாயுதம் பிள்ளை யின் ஜாகைக்குப் போய் அவர்களுக்கு நம்பிக்கை உண்டாகத்தக்க தைரிய மொழிகளைக் கூறி அவர்களைத் தேற்றுவதுமாய் இருந்தனர்.