பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மாயா விநோதப் பரதேசி வெள்ளிக்கிழமை பகல் நான்கு மணி இருக்கலாம்; அவர் தமது கச்சேரியில் இருந்து தமது உத்தியோக அலுவல்களைக் கவனித்திருந்த சமயத்தில், அவருக்குப் பக்கத்தில் இருந்த டெலிபோனில் கணகனவென்று மணியடித்துக் கொண்டது. யாரோ தன்னோடு பேச விரும்புவதை உணர்ந்த பட்டாபிராம பிள்ளை உடனே டெலிபோனை எடுத்து வைத்துக் கொண்டு "யார் என்னைக் கூப்பிடுகிறது? என்று வினவினார். டெலிபோன் வழியாகப் பேசிய மனிதர், "ஐயா! தாங்கள் கலெக்டர் பட்டாபிராம பிள்ளைதானா" என்றார். கலெக்டர், "ஆம், நீங்கள் யார்?" என்று வினவினார். மற்றவர், "நான் ஒரு போலீஸ் ஜெவான்; எழும்பூர் மாஜிஸ்டிரேட் கச்சேரியைச் சேர்ந்த சப் ஜெயிலிலிருந்து நான் இப்போது உங்களுக்கு இந்தச் செய்தி அனுப்புகிறேன்" என்றார். கலெக்டர், "ஒகோ! அப்படியா! சரி; என்ன செய்தி? காணாமற்போன பையனைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?" என்று மிகுந்த ஆவலோடு வினவினார். அந்த மனிதர், "இல்லை. இது வேறே விஷயம். இந்த சப்ஜெயிலில் ஒரு புதிய கைதி வந்திருக்கிறான். சர் சவலை ராமசாமி முதலியார் சத்திரத்தில் நேற்று ராத்திரி படுத்திருந்த இவன் தனக்குப் பக்கத்தில் படுத்திருந்த ஒரு வழிப்போக்கருடைய கை விரலில் இருந்த வைர மோதிரத்தைக் கழட்டி வாயில் போட்டுக் கொண்டு விழுங்கி விட்டானாம். அந்தத் திருட்டுக் குற்றத்திற்காக இவனைப் பிடித்து இங்கே அடைத்திருக்கிறார்கள். அவனிடம் நான் தனியாகப் பேசி, அவனுடைய மர்மத்தை எல்லாம் தந்திரமாக விசாரித்து அறிந்த காலத்தில், அவன் உங்களைப் பற்றி முக்கியமான ஒரு செய்தி தெரிவித்தான். கும்பகோணத்தில் உள்ள உங்கள் விரோதி ஒருவர் அவனை இங்கே அனுப்பினாராம். அவனுக்குத் துணையாக இன்னம் பல ஆள்கள் வந்திருக்கிறார் களாம். உங்கள் வீட்டில் இன்று உங்கள் பெண்ணுக்கு நிச்சய தார்த்தம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறீர்களாம். அந்த முகூர்த்தம் 5-ಹಹTLEು செய்துவிடவோ, அல்லது, உங்களுக்கும், உங்களுடைய சம்பந்தி வீட்டாருக்கும். ஏதேனும் கெடுதல்