பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 31 செய்யவோ அவர்கள் எல்லோரும் வந்திருப்பதாகத் தெரிகிறது. உங்கள் சம்பந்தி வீட்டார் கோமளேசுவரன் பேட்டையில் இறங்கி இருக்கிறார்களாம். இந்த முரட்டு மனிதருடைய தலைவனான அவன் பிடிபட்டுப் போயிருந்தாலும், மற்றவர்கள் எப்படியும் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றுவார்கள் போலத் தோன்றுகிறது. ஆகையால், நீங்கள் இன்று இரவு நிரம்பவும் ஜாக்கிரதையாக இருங்கள். கோமளேசுவரன் பேட்டையில் உள்ளவர்களை உங்கள் பங்களாவிற்கே அழைத்துக் கொள்வதோடு, இதைப் போலீஸ் கமிஷனருக்குத் தெரிவித்து, 50 போலீஸ் ஜவான்களை வருவித்து உங்கள் பங்களாவிற்கு இன்று இரவு முழுதும் காவல் போட்டு வையுங்கள். இது விஷயத்தை அசட்டை செய்தால், உங்களுக்குப் பெருத்த அபாயம் நேருவது நிச்சயம். நான் மறுபடியும் அந்தக் கைதியிடம் பேச்சுக் கொடுத்து விவரமான செய்திகளை எல்லாம் அவனிடத்தில் இருந்து கிரகித்து மறுபடியும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஆகையால் நீங்களாவது, போலீஸ் கமிஷனராவது இங்கே வரவும் கூடாது, இந்தக் கைதிக் கெதிரில் இந்தப் பிரஸ்தாபத்தையே எடுக்கவும் கூடாது. இவனிடத்தில் இருந்து நான் கிரகித்த விஷயத்தை மற்றவருக்குத் தெரிவித்திருக்கிறேன் என்பது இவனுக்குத் தெரிந்தால், இவன் அதற்கு மேல் எச்சரிப்படைந்து தன்னைப் பற்றி எந்தத் தகவலும் வெளியிட மாட்டான். ஆகையால், நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அவசரம், அவசரம், அவசரம். ஏமாறினால் அபாயம் சம்பவிப்பது முக்காலும் திண்ணம். மாஜிஸ்டிரேட் கைதிகளைப் பார்க்க இதோ வருகிறார். ஆகையால், நான் இங்கே நின்று மேலும் உங்களோடு பேச முடிய வில்லை; நான் போகிறேன். மறுபடி உங்களை உங்களுடைய வீட் டில் இருக்கும் டெலிபோன் வழியாக கூப்பிடுகிறேன்" என்றார். அதைக் கேட்ட பட்டாபிராம பிள்ளை, "ஐயா! உங்களுடைய பெயர் என்ன?" என்றார். அதற்கு யாதொரு மறுமொழியும் கொடாமல் அந்த மனிதர் டெலிபோனை மூடிவிட்டு அப்பால் போய்விட்டது தெரிந்தது. அந்த மனிதர் கூறிய விபரீதமான செய்தியைக் கேட்டதனால் பட்டாபிராம பிள்ளையின் மனம் மிகுந்த கலவரமும் கவலையும்